தினமணி கொண்டாட்டம்

தமிழில் வரும் கடத்தல் கதை 

DIN

1972-ஆம் ஆண்டு ஜான் மோர்ல் என்பவர் எழுதிய நாவலான "பர்ஸ்ட் ப்ளட்' நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நாவலைத் தழுவி 1982-ஆம் ஆண்டு அதே பெயரில் படம் வெளிவந்தது. கடுமையான வியட்நாம் போரில் பங்குகொண்டு உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்ட நிலையில் ஒரு சிறிய வட்டத்திற்குள் தனது வாழ்வினை நடத்தி வரும் ஜான் என்கிற ஒரு தனிமனிதனின் போராட்டமே கதையின் கரு. 
வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அந்தப் படம் மூன்று பாகங்கள் வெளிவந்தது. இதில் இரண்டாம் பாகம் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை குவித்தது. தொலைக்காட்சி தொடர்கள், காமிக்ஸ் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் எனப் பல ரூபங்களிலும் இந்தக் கதை வெளிவந்தது. இதன் அடுத்த பாகம் "ராம்போ லாஸ்ட் ப்ளட்' என்ற பெயரில் வெளிவரவுள்ளது. மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு களவாணி கும்பல், ஜான் நண்பரின் மகளை கடத்துகிறது. அதன் பின் நடப்பது... அதன் காரணங்களை விறு விறு கதை. அடிரியன் குர்பர்க் இயக்குகிறார். பிரையன் டெய்லர் இசையமைக்கிறார். பிரண்டான் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் வரும் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT