தினமணி கொண்டாட்டம்

தொழில் நுட்ப ஆராய்ச்சி

ஜெ


இத்தாலியில் மம்மிகளை கொண்டு பல கட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சியாளர்கள், அவர்கள் எந்த காலத்தில் வாழ்ந்தவர்கள், உயிரிழக்கும் போது அவர்களது வயது என்ன உள்ளிட்ட விவரங்களை உறுதி செய்து வருகின்றனர். 

குறிப்பாக எகிப்திய மம்மிகள் குறித்து மேலும் பல ரகசியங்களை கண்டறிய நவீன மருத்துவ தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் பயன்
படுத்த துவங்கி உள்ளனர். 

மம்மிகளின் ரகசியங்களைக் கண்டறியும் ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, இத்தாலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சி.டி ஸ்கேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த எகிப்திய மம்மியை சி.டி. ஸ்கேன் இயந்திரத்தில் ஆராய்ச்சியாளர்கள் அறிவியல் ஆராய்ச்சிக்காக வைத்துள்ளனர்.

இதற்காக பண்டைய எகிப்திய துறவியான அங்கேகோன்சுவின் பதப்படுத்தப்பட்ட உடலான மம்மி, பெர்கமோவின்  தொல்பொருள் அருங்காட்சியகத்தில் இருந்து, மிலனின் பாலிகிளினிகோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. சி.டி ஸ்கேன் ஒருமுறை எடுப்பது சுமார் 300 முறை எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். சி.டி ஸ்கேனில் மனித உடலின் குறுக்குவாட்டில் உள்ள பகுதிகளில் ஊடுகதிர்களை செலுத்தப்படுகிறது.

எக்ஸ்ரேவை விட அதிக தகவல்களை மருத்துவர்களுக்கு வழங்குகிறது. இதில் 2டி முறையில் உடலின் பாகம் காட்டப்படுகிறது. இந்த சி.டி ஸ்கேன் ஆராய்ச்சி மூலம்  கிட்டத்தட்ட சுமார் 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட  அங்கேகோன்சுவின் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் குறித்து பல தகவல்களை ஆய்வு செய்து கண்டறிய உள்ளனர். 

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மம்மி திட்ட ஆராய்ச்சி இயக்குநர் சபீனா மல்கோரா நடைமுறையில் மம்மிக்கள் ஒரு உயிரியல் அருங்காட்சியகம். அவை "டைம் காப்ஸ்யூல்' போன்றவை என்று குறிப்பிட்டுள்ளார்.

அங்கேகோன்சுவின் பெயர் கண்டறியப்பட்டது பற்றி தகவல் தெரிவித்த சபீனா மல்கோரா, கி.மு 900 முதல் 800 வரை தேதியிட்ட சர்கோபகஸிலிருந்து இந்த மம்மியின் பெயரை கண்டறிந்ததாக கூறினார். 

இந்த சி.டி ஸ்கேன் ஆராய்ச்சி மூலம் எகிப்திய துறவியான அங்கேகோன்சு வாழ்க்கை முறை மற்றும் மரணம் பற்றிய ஏராளமான தகவல்களை புனரமைக்க முடியும் மற்றும் அவரது உடலை பாதுகாக்க எந்த வகையான தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டன என்பதையும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். 

தற்கால நவீன மருத்துவ ஆராய்ச்சிக்கு பண்டைய காலத்து நோய்கள் மற்றும் காயங்களை பற்றி தெரிந்து கொள்வது மிக முக்கியமான ஒன்று. கடந்த கால புற்றுநோய் அல்லது தமனி பெருங்குடல் அழற்சி குறித்து நமக்கு தெரிய வரலாம். அப்படி தெரிய வந்தால் இது நவீன ஆராய்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி உள்ளார் சபீனா மல்கோரா.

அண்மையில் எகிப்தில் வசிக்கும் ஒருவர், இத்தாலி தூதரகத்திற்கு மம்மி ஒன்றை வழங்கியுள்ளார். அதனை சி.டி ஸ்கேன் ஆய்வுக்கு உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், அந்த மம்மி கி.மு. 900களில் வாழ்ந்த ஒருவருடையது என அடையாளம் கண்டுள்ளனர்.

போலந்து வார்ஸாவில், ஆண் சடலம் என நினைத்து மம்மியை சி.டி ஸ்கேன் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அது 20 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி மம்மி என அடையாளம் தெரிந்ததாக கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT