தினமணி கொண்டாட்டம்

கனவு தேசம்

DIN

கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், யோகி பாபு வரிசையில் கதாநாயகனாக நடிக்கிறார் காமெடியன் சாம்ஸ்.  படத்தின் பெயர்  "ஆபரேஷன் ஜுஜுபி'.   இப்படத்தில் சாம்ஸூக்கு மனைவியாக வினோதினி வைத்தியநாதன் நடிக்கிறார்.  படவா கோபி, ராகவ், ஜெகன்,சந்தானபாரதி, வெங்கட் சுபா, வையாபுரி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களே ஏற்று நடிக்கின்றனர்.   கதை எழுதி இயக்குகிறார் அருண்காந்த். படம் குறித்து அவர் பேசும் போது... "" ”சாம்ûஸ முதல் முறையாக ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறேன். மிகப்பெரிய ஆபரேஷன் ஒன்றை சர்வசாதாரணமாக கையாளுவது தான் கதை. அதனால் தான் படத்திற்கு "ஆபரேஷன் ஜுஜுபி' என்று தலைப்பு வைத்திருக்கிறோம்.
இது பேண்டஸி அரசியல் படமாகும். ஒரு தனி மனிதன் சந்தோஷமாக வாழ்வதற்காக ஒரு நாடு உருவாக வேண்டும், என்ற சாமானிய மக்களின் கனவு தான் இதன் திரைக்கதை. 
இந்தியாவை ஒரு மகிழ்ச்சி மிக்க நாடாக எப்படி மாற்றுகிறார்கள், என்பது தான் கதை. வித்தியாசமான படமாக இருப்பதோடு, புதிய முயற்சியாகவும், சோதனை முயற்சியாகவும் இப்படம் இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை  தணிக்கை குழுவினர் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT