தினமணி கொண்டாட்டம்

தம்பதிகளின் தானியங்கி சேவை!

ராஜன்

கரோனா காலத்தில் மிக முக்கியமான தேவையாகி விட்டது முகக்கவசம். பொதுமக்களின் நலன் கருதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் தானியங்கி முகக்கவசம் வழங்கும் இயந்திரத்தை பொது மக்களின் தேவைக்காக வைத்துள்ளனர் கிருஷ்ண பிரியதர்ஷினி- விஜயராகவன் தம்பதிகள்.

முகக்கவசம் இல்லாமல் பேருந்து நிலையத்தின் உள்ளே அனுமதி இல்லை என்றதும் பொதுமக்கள் இவர் வைத்துள்ள தானியங்கி இயந்திரத்தின் உதவியை நாடி வருகிறார்கள். ஐந்து ரூபாய் நாணயத்தை தானியங்கி இயந்திரத்தில் போட்ட சில நொடிகளில்  கவரில் முகக்கவசம் வெளி வருகிறது.  

""நாங்கள் இருவரும் பொறியியல் பட்டதாரிகள், கல்லூரியில் ஒன்றாக படித்தோம். காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இருவருமே ஐ.டி துறையில் பணியாற்றினோம். ஒரு கட்டத்தில் அரசிடமிருந்து 2 லட்ச ரூபாய் கடனாக பெற்று இளநீர் வழங்கும் இயந்திரத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கினோம். ஆனால் அப்போது தான் பொது முடக்க தொடங்கியது. தற்போது முகக்கவசம் அணியுங்கள் என்று வலியுறுத்திவருகிறார்கள்.

 தற்போது முக்ககவசம் அணிந்து கொள்வதன் மூலமாக பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்கள். பொதுமக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் முகத்தை மறைக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அப்போது தான் நோய் பரவுவதை தடுக்க முடியும் என்று பரிந்துரைக்கிறார்கள்.

எனவே தான்  எங்கள் எண்ணத்தை மாற்றி முகக்கவசம் தயாரிப்பு பணியில் இறங்கி இந்த தானியங்கி முகக்கவசம் வழங்கும் இயந்திரத்தை வடிவமைத்தோம். இதன் விலை 22 ஆயிரம் ரூபாய்''  என்றார் பிரியதர்ஷினி.

""நான் சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சி மாணவராக இருக்கிறேன். இப்போது முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அதனை கருத்தில் கொண்டு நாங்கள் தயாரித்தது தான் இந்த இயந்திரம். கோயம்பேட்டில் நாள் ஒன்றுக்கு இப்போது பொது முடக்கம் ஆரம்பிக்கும் முன்பு வரை 40 ஆயிரம் முகக்கவசம் விற்றன. ஒரு முகக்கவசம் தயாரிக்க எங்களுக்கு மூன்று ரூபாய் செலவாகும். ஒரு முகக்கவசம் விற்றால் 2 ரூபாய் லாபமாக கிடைக்கிறது.  

தொடர்ந்து கரோனா தொற்றின் அலையை சமாளிக்க முகக்கவசத்தின் தேவையை கருத்தில் கொண்டு சென்னையில் பள்ளி, கல்லூரி, கோயில்கள், வணிக வளாகம் போன்றவற்றில் இந்த தானியங்கி இயந்திரத்தை வைக்க  இருக்கிறோம்.

வணிக நோக்கம் இல்லை. பொதுமக்களின் சேவையை கருத்தில் கொண்டு இது போன்ற முயற்சியில் இறங்கியுள்ளோம்.'' என்கிறார் விஜயராகவன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

SCROLL FOR NEXT