தினமணி கொண்டாட்டம்

விவசாயம் செய்வதற்கு வரிசை!

பனுஜா

தெற்கு கொரியாவில் வெங்காயம் விளைவிக்க ஆட்கள் வேண்டும் என்று கேரளா அரசின் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் நிறுவனத்திடம் சொல்ல... அந்தக் கேரள நிறுவனம் தென் கொரியா வேலை வாய்ப்புகள் குறித்து அறிவிப்பு வெளியிட.... ஆன்லைனில் பதிவு செய்ய இளைய தலைமுறை குவிந்தனர். இதனால் கணினியில் கோளாறு ஏற்படவே நேரில் வாருங்கள்' என்று மறு அறிவிப்பு வெளிவர... சொன்ன இடத்தில் இளைய தலைமுறை குவிந்தனர். கியூ வரிசையில் நின்றனர்.

தென் கொரியாவின் வெங்காயம் வளரும் நிலங்கள் ஸினான், முஆன் தீவுகளில் உள்ளன. வெங்காய விவசாயத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ஒரு லட்சத்து பன்னிரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படுமாம். மாதம் 28 நாள் வேலை. காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை வேலை. தங்க வீடு வாடகைக்கு தானே பிடித்துக் கொள்ள வேண்டும். கொரியா உணவு இந்திய உணவிலிருந்து மாறுபட்டது. குளிர்... அதிகக் குளிர். அதுதான் கொரியாவின் காலநிலை. மைனஸ் 20 டிகிரி வரை வருமாம்.

இப்போதைக்கு 100 பேர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்களாம். எதிர்காலத்தில் மேலும் 1000 பேர்களை வெங்காய விவசாயத்தில் வேலை செய்ய அமர்த்துவார்களாம். கரோனா தடுப்பு மருந்து இரண்டு முறை போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

SCROLL FOR NEXT