தினமணி கொண்டாட்டம்

வெங்கட் பிரபு தொடங்கிய ஓடிடி தளம்

DIN

சினிமா வெளியீட்டுக்காகத் தொடர்ந்து ஓடிடி தளங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. தயாரிப்பு நிறுவனங்கள், தனியார் கம்பெனிகள் என பலவும் தனித்தனியாக ஓடிடி தளங்களை தொடங்கி வருகின்றன. அந்த வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு "பிளாக் டிக்கெட் சினிமாஸ். காம்' என்ற புதிய ஓடிடி தளத்தை தொடங்கி இருக்கிறார். ஹேங்ஓவர் மீடியா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் அங்கமாக இந்த தளத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

இந்த தளத்தில் அறிமுக சிறப்பு காட்சியாக சிம்புதேவன் இயக்கியுள்ள "கசடததபற' படம் வெளியாகியுள்ளது. இனி இந்த ஓடிடி தளத்தில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தரமான படங்கள் தொடங்கி.... இசை நிகழ்ச்சிகள், மற்ற விடியோக்கள் ஆகியவற்றை வாங்கி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற ஓடிடி தளங்களைப் போல் மாதந்தோறும் ஒரு தொகை என்ற இலக்கு இங்கே இல்லை. பார்க்கும் படங்கள், நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும். அந்தந்த நேரத்தில் கட்டணத்தை தேர்வு செய்து செலுத்தினால் போதும். இது போக பல நிகழ்ச்சிகளை கட்டணம் இல்லாமல் பார்க்கலாம்.  

இது குறித்து வெங்கட் பிரபு பேசும் போது... ""இது என் சினிமா பயணத்தில் அடுத்த கட்டம். சினிமா எனும் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கியுள்ளேன். என்னால் சினிமாவுக்கு ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் செயல்படுகிறேன். ஒரு படத் தயாரிப்பாளர் அந்தப் படத்தின் மீதான உரிமையை எந்த நாளில் வேண்டுமானாலும் திரும்பப் பெறவும் இது உதவும் வகையில் அமைத்துள்ளேன். இதுவே தயாரிப்பாளர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என நம்புகிறேன்'' என்றார் வெங்கட்பிரபு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT