தேனியில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய தையல் தொழிலாளி, எண் கணித செஸ் விளையாட்டில் புதிய வடிவமைப்புகளை உருவாக்கி அசத்தி வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம், கஸ்தூரிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன் முருகன். பள்ளிப் படிப்பை 3-ம் வகுப்புடன் நிறுத்திய அவர், தேனியில் குடியேறி தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். சிறு வயதில் செஸ், கேரம் விளையாட்டில் ஆர்வமாக இருந்ததாகக் கூறும் சேகர், குழந்தைகளுக்காக செஸ் விளையாட்டில் எண் கணிதத்தைச் சேர்த்து புதிய வடிவமைப்பை உருவாக்கி, கடந்த 2007-ஆம் ஆண்டு இதற்கான காப்பி ரைட் பெற்றுள்ளார்.
""எண் கணித செஸ் விளையாட்டில் 13ஷ்13 கட்டங்களில் கருப்பு, வெள்ளை நிறக் காய்களுக்குப் பதிலாக பெருக்கல், வகுத்தல் குறியீட்டில் காய்கள் இருக்கும். டாஸ் வெல்பவர்கள் விரும்பும் குறியீடு உள்ள காய்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். கட்டங்களில் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். காய்களுக்கான வழக்கமான மூவ்மெண்ட் கட்டங்களில், நகர்த்தும் காய் நிற்கிற கட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணும், வெட்டப்படும் காய் நிற்கும் கட்டத்தில் உள்ள எண்ணும் சம்பந்தப்பட்ட காயின் குறியீட்டுக்குள் அடங்க வேண்டும். இந்த விளையாட்டு மூலம் வகுபடும் எண், வகுபடா எண், பெருக்குத் தொகை ஆகியவற்றைக் குழந்தைகள் விரைவாகத் தெரிந்து கொள்ளலாம். எண் கணிதத் திட்டமிடல் திறன் உயரும்.
எனது மற்றொரு வடிவமைப்பான அ ற்ர் ழ என்ற செஸ் விளையாட்டில் ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட காய்கள் மூலம், ஆங்கிலத்தில் வார்த்தை அமைத்து விளையாடும் புதிய முறையை உருவாக்கியுள்ளேன். இதில், ராஜாவுக்கு அ, மந்திரிகளுக்கு முறையே உ,க,ஞ,ம, யானைகளுக்கு முறையே ப,ய குதிரைகளுக்கு முறையே ர,ல,வ,ழ என்ற எழுத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டில் ராணி இல்லை. காய்களுக்கான வழக்கமான மூவ்மெண்ட் கட்டங்களில், நகர்த்தும் காயின் எழுத்தில் தொடங்கி வெட்டப்படும் காயின் எழுத்தை உள்ளடக்கிய ஆங்கிலச் சொல்லுடன் முடிக்க வேண்டும். ஆட்டமிழக்கும் காய்களுக்குப் புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டின் மூலம் குழந்தைகள் எழுத்துப் பிழையின்றி ஆங்கிலச் சொல் அமைப்பு திறனை வளர்த்துக் கொள்வதுடன், புதிய சொற்கள் மற்றும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
இதே போல அ 1 என்ற புதிய சீட்டு விளையாட்டில் தலா 52 சீட்டுகள் வீதம் மூன்று நிறங்களிலும், 12 ஜோக்கர் சீட்டுகளையும் இணைத்து மொத்தம் 168 சீட்டுகளை வடிவமைத்துள்ளார். தலா 13 சீட்டுகளுடன் 2 முதல் 11 பேர் வரை விளையாடக் கூடிய இந்த விளையாட்டில், ஒவ்வொரு நிறத்திலும் உள்ள சீட்டுக்களில் எண்களுக்குப் பதிலாக அ இல் தொடங்கி ழ இல் முடியும் வகையில் 26 எழுத்துக்களைக் கொண்ட 2 செட் சீட்டுகள் இருக்கும். ஒரே நிறத்தில் உள்ள சீட்டில் உள்ள எழுத்துக்களைக் கொண்டு, 4 செட்களாக ஆங்கிலச் சொல்லைக் கொண்ட ஜோடிகளைச் சேர்க்க வேண்டும். ஜோக்கர் சீட்டை வழக்கம் போல பயன்படுத்திக் கொள்ளலாம். ஜோடி சேராத கழிவுச் சீட்டுகளுக்கு புள்ளிகள் கொடுத்து விளையாடலாம்.
சாதாரணமாக செஸ் மற்றும் சீட்டு விளையாட்டு அடிப்படையிலான இந்த புதிய விளையாட்டுகள் சிறுவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்'' என்று கூறும் முருகன், கேரம் விளையாட்டில் புதிய வடிவமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.