முகப்பு
இளைஞர்மணி

காற்றின் மாசை அளக்கும் கருவி!

இன்றைய பெரும் பிரச்னைகளுள் ஒன்று காற்றில் மாசு அதிகரித்திருப்பது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் புகை, கோடிக்கணக்கான வாகனங்களின் புகை எல்லாம் காற்றை மாசாக்கிவிட்டன. நகரங்களில் வாழ்பவர்கள் இந்த மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால், பலவிதமான நோய்களுக்கு உள்ளாகிறார்கள்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:57 AM
பகிர்:

இன்றைய பெரும் பிரச்னைகளுள் ஒன்று காற்றில் மாசு அதிகரித்திருப்பது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் புகை, கோடிக்கணக்கான வாகனங்களின் புகை எல்லாம் காற்றை மாசாக்கிவிட்டன. நகரங்களில் வாழ்பவர்கள் இந்த மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால், பலவிதமான நோய்களுக்கு உள்ளாகிறார்கள்.

காற்றில் எவ்வளவு மாசு கலந்துள்ளது என்பதைக் கண்டுபிடிக்க ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஹெவின் ஹார்ட் என்பவரைத் தலைவராகக் கொண்ட குழுவினர்.

இந்தக் கருவிக்குப் பெயர் பழஞஅ ரஉஅதஅஆகஉ அடடந. ஆம்... இந்தக் கருவியை ஒருவர் அணிந்து கொள்ள முடியும். இதை அணிந்து கொண்டு சென்றால், செல்லும் இடங்களில் உள்ள காற்றில் உள்ள மாசின் அளவைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் கருவியில் லேசர் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு சிறிய மின்விசிறியும் உள்ளது. இந்த மின்விசிறி வெளிக்காற்றை உறிஞ்சி கருவிக்குள் செல்லும். கருவிக்குள் செல்லும் காற்றில் உள்ள மிக நுண்ணிய பொருள்களின் அளவை லேசர் கண்டுபிடித்துவிடும். கருவியுடன் செல்போன் இணைக்கப்பட்டிருப்பதால், காற்றில் கலந்துள்ள மாசின் அளவு உங்களுடைய செல்போனில் தெரிந்துவிடும்.

புதிதாக வாடகை வீட்டைத் தேடிக் கொண்டிருப்பவர்கள், புதிய வீடு வாங்க இருப்பவர்கள், இந்த இடத்தில் குடியிருக்கலாமா? இல்லை வேறு இடத்துக்குப் போய்விடலாமா? என்பதை காற்றில் கலந்துள்ள மாசின் அளவை வைத்து முடிவு செய்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.