முகப்பு
இளைஞர்மணி

அழைக்கிறது உலகப் புகைப்படப் போட்டி!

இரவில் இந்த உலகம் (The World at Night) எனும் பன்னாட்டு அமைப்பு 2009 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதுமுள்ள இயற்கை நிலக்காட்சி (Landscape) மற்றும் விண்வெளி (Astronomy) சார்ந்த புகைப்படங்களை (Photograph) தொகுத்துக் கொண்டிருக்கிறது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:00 PM
பகிர்:

இரவில் இந்த உலகம் (The World at Night) எனும் பன்னாட்டு அமைப்பு 2009 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதுமுள்ள இயற்கை நிலக்காட்சி (Landscape) மற்றும் விண்வெளி (Astronomy) சார்ந்த புகைப்படங்களை (Photograph) தொகுத்துக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு 2010 ஆம் ஆண்டு முதல் பன்னாட்டுப் புவி மற்றும் வானம் தொடர்புடைய புகைப்படம் எடுக்கும் போட்டியை (International Earth and Sky Photo Contest) நடத்தி வருகிறது.

இந்தப் போட்டிக்கு ஒவ்வொரு ஆண்டும் தனியாகக் கருத்துரு (Theme) ஒன்று வழங்கப்படுகிறது. இப்போட்டிக்கு இந்த ஆண்டு அடர்நீல வானத்தின் முக்கியத்துவம் (Dark Skies Importance) எனும் கருத்துருவில் இரவு நேர வானத்தின் அழகு (Beauty of the Night Sky) மற்றும் விளக்குகளுக்கு எதிர் (Photo Contests) எனும் இரு வகையான தலைப்புகளில் புகைப்படப் போட்டிகள் (Photo Contests) அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை. புவியின் இயற்கை நிலப்பகுதி மற்றும் வானம் ஆகியவற்றை உள்ளடக்கி எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்தப் போட்டிக்கு அனுப்பலாம். பூமியிலிருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் அல்லது குறிப்பிடத்தக்க இடங்கள், அழகிய இடங்கள் போன்றவற்றுடன் வானத்தில் தெரியும் நட்சத்திரங்கள் அல்லது சந்திரன் இணைந்து தெரியும் தோற்றத்தில் புகைப்படங்களை எடுத்து அனுப்ப வேண்டும். இந்தப் போட்டிக்கு ஒருவர் ஐந்து படங்கள் வரை அனுப்பலாம். ஆனால், இந்தப் படங்கள் அனைத்தும் 1-1-2015 ஆம் தேதிக்குப் பின்பு எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

உங்கள் புகைப்படங்களை இந்த அமைப்பின் http:twanight.orgguest  விருந்தினர் பக்கத்தில் ஒவ்வொரு படத்திற்கும் தனித்தலைப்பிட்டு, அது எடுக்கப்பட்ட இடம் குறித்த தகவல்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அப்படியே அந்த புகைப்படங்களை guest@twanight.org  எனும் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும். போட்டிக்கான புகைப்படங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30-4-2016.

போட்டியில் பங்கேற்ற ஒளிப்படங்களை இந்த அமைப்பால் அமைக்கப்பட்ட 9 பேர் கொண்ட நடுவர் குழுவினர் பார்வையிட்டு சிறந்த புகைப்படங்களைத் தேர்வு செய்து, ஜூன் மாதத்தில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு புகைப்படக்கருவி நிறுவனங்கள் மற்றும் விண்வெளி தொடர்புடைய கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள் அளிக்கும் கருவிகள் பரிசுகளாக அளிக்கப்படும்.

புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுடைய இளைஞர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளவும், போட்டி குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள http://www.twanight.org/newTWAN/news.asp?newsID=6107 எனும் இணையதள முகவரியைப் பயன்படுத்துங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.