இளைஞர்மணி

கைவினைப் பொருள்கள் தயாரிக்க உதவும் இணையதளம்

தினமணி

இன்றைய நிலையில், மகளிர்களால் நடத்தப்பட்டு வரும் பல்வேறு சுயஉதவிக் குழுக்கள் கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தக் கைவினைப் பொருட்களைப் பரிசுப் பொருளாக வழங்குவதில் அனைவரும் அதிகமான ஈடுபாடு கொண்டிருக்கின்றனர். கைவினைப் பொருட்களுக்கு இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும்  சந்தை வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. பல்வேறு கைவினைப் பொருட்களைச் செய்வதற்கான செய்முறை விளக்கங்களைக் கொண்டு ஆங்கில மொழியிலான ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த இணையதளத்தில் கைத்திறத் தொழில் (Craft), சித்திரத் தையல் (Embroidery), பூ தயாரித்தல் (Flower Making), ஆபரணங்கள் தயாரித்தல் (Jewellery Making), குழந்தைகளுக்கான கைத்திறத் தொழில் (Kids Craft), காகிதக் கலை (Paper Art), மறுசுழற்சி உற்பத்திகள் (Recycled Products) எனும் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. 

இவை தவிர, ஜப்பானியக் காகிதச் சிற்பக்கலை (Origami), சுருட்டூசி கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் (Quilling), தையல் (Sewing), முடி ஒப்பனை (Hair Style), குரோசா கைவினைப் பொருட்கள் (Chrocet), வீட்டு அலங்கரிப்பு (Home Decor), பெண்களின் நக அழகூட்டும் கலை (Nail Art) போன்ற துணைத்தலைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. 

இங்கு இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு தலைப்பிலும் சொடுக்கினால், பல்வேறு கைவினைப் பொருட்கள் தயாரிப்பதற்கான செய்முறைக் குறிப்புகள் பார்வைக்குக் கிடைக்கின்றன. இந்தக் குறிப்புகளில் தேவையான குறிப்புகளில் சொடுக்கினால், அழகிய படங்களுடன் அந்தக் கைவினைப் பொருளைச் செய்வதற்கான செய்முறை விளக்கங்கள் கிடைக்கின்றன.

பல புதிய கைவினைப் பொருட்களைச் செய்து பார்க்க விரும்புபவர்கள் http://www.simplecraftidea.com/ எனும் இணையதளத்திற்குச் 
செல்லலாம்.  
- மு. சுப்பிரமணி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT