இளைஞர்மணி

இந்த ஏ.சி.க்கு மின்சாரம் தேவையில்லை!

வசதி படைத்தவர்கள் மட்டும் பயன்படுத்தி வந்த குளிர்சாதன வசதி (ஏ.சி.) இன்று அனைவரிடமும் விரிவடைந்து உள்ளது.

DIN

வசதி படைத்தவர்கள் மட்டும் பயன்படுத்தி வந்த குளிர்சாதன வசதி (ஏ.சி.) இன்று அனைவரிடமும் விரிவடைந்து உள்ளது. குளிர்சாதன வசதிகளுக்கு மக்கள் அடிமையாகியும் உள்ளனர். பெரு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் பெரிய அளிவிலான குளிர்சாதன இயந்திரங்களால் ஓசோன் மண்டலம் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, அதனை இயக்கத் தேவைப்படும் அதிகமான மின்சாரம், நீர் ஆகியவற்றால் இயற்கை வளம் அழித்து வருகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் அமெரிக்காவின் கொளாரடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மின்சாரம், நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் குளிர்சாதன வசதியை ஏற்படுத்தும் மெல்லிய வடிவிலான ரேடியேடிவ் கூலிங் பிலிமை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

சூரியனின் கதிர் வீச்சை வைத்தே குளிர்சாதன வசதி பெறும் இந்த வகையிலான பிலிமை இயக்க மின்சாரமோ, குடிநீரோ தேவையில்லை என்பதுதான் பெரும் ஆச்சரியம். குறைவான செலவில், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்து கொளாரடோ பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் ஜியாபோ இன் கூறுகையில், ""தெள்ளத்தெளிவாக இருக்கும் பாலிமர்களில் கண்ணாடித் துகள்களை இணைத்து அதன் மேல் வெள்ளியால் பூசப்பட்ட இந்த பிலிம்தான், சூரியக் கதிர்களின் வெப்பத்தை இழுத்துக் கொண்டு குளிரூட்டுகிறது.

அலுமினியம் பாயிலை விட சற்று தடிமனாக இருக்கும் இந்த பிலிமை பெரும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வீடுகள் ஆகியவற்றின் மேல் ஒட்டினால் போதும், குளிர்ந்த காற்றைப் பெறலாம்.  குறைவான செலவில் உருவாகக் கூடிய இந்த குளிர்சாதன வசதி அளிக்கும் பிலிம்கள் உலகம் முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தும். வெறும் 10 முதல் 20 சதுர அடிக்கு இந்த பிலிமை 4 பேர் வாழும் வீட்டின் மாடியில் ஒட்டினால்போதும் கோடைக்காலங்களில் வீட்டில் குளிர்ந்த காற்று வீசும். இதன் சோதனையும் வெற்றி பெற்றுள்ளது'' என்றார்.
- அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது: அமைச்சர் கே.என்.நேரு

இந்தப் புன்னகை என்ன விலை... சந்தீபா தர்!

விழிகளின் தவிப்பு... மிருணாள் தாக்குர்!

நீண்ட தொலைவு பயணத்துக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

F1 வீரர் நரேன் கார்த்திகேயன் - Ajith கலந்துரையாடல்!

SCROLL FOR NEXT