இளைஞர்மணி

ஸ்கோர் மேக்ஸ் குயிஸ் ஆப்!

DIN

அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்காக "ஸ்கோர் மேக்ஸ் குயிஸ் ஆப்'- ஐ செல்லிடப் பேசிகளில் பதிவிறக்கம் செய்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் முன்பெல்லாம் சில ஆண்டுகளில் நடந்த பழைய தேர்வு வினாக்களை வாங்கிப் படித்து தங்களைத் தேர்வுக்குத் தயார்படுத்திக் கொண்டனர்.  அதன் பிறகு திறமையான ஆசிரியர்களால் வினா வங்கிகள் தயாரிக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டன. அதனை வாங்கி மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.  அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற வேண்டுமென தனியார் பள்ளிகள் தினந்தோறும் தங்களுடைய மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல், இணையதளங்களிலும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகள், வினா வங்கிகள் ஆகியவை உள்ளன.  அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  தற்போது மாணவர்களிடம் செல்லிடப்பேசிகள் உள்ளன. அதிலேயே தங்களுடைய பாடங்களைப் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  அதோடு அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்காக பல்வேறு செல்லிடப்பேசி செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதில் "ஸ்கோர் மேக்ஸ்' என்ற செல்லிடப்பேசி செயலியும் ஒன்றாகும். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ள ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு (சிபிஎஸ்சி) மாணவர்கள் ஸ்கோர் மேக்ஸ் குயிஸ் என்ற செல்லிடப்பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து இலவசமாகப் பயன்படுத்தி அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம். மேலும் கூடுதலான கேள்விகளுக்கு பதில் அளித்து தங்களைத் தயார்படுத்திக் கொள்ள அதற்குரிய குறைந்த பட்ச கட்டணத்தைச் செலுத்தியும் அதனைப் பயன்படுத்தலாம்.
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT