இளைஞர்மணி

படம் பிடித்தால் தமிழில் மொழி பெயர்க்கும்"ஆப்'!

அ. சர்ஃப்ராஸ்

தமிழில் மொழி பெயர்க்க, ஆங்கில அகராதியின் நூற்றுக்கணக்கான பக்கங்களை புரட்டிய நாள்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்றைய ஸ்மார்ட் தொழில்நுட்பம் வருங்காலத்தில் அகராதிகளை அருங்காட்சியகங்களில் வைக்கும் அளவிற்கு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
உலக தேடல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் "கூகுள்' நிறுவனம் உருவாக்கியுள்ள மொழிபெயர்ப்பு ஆப் ‘GOOGLE TRANSLATE'' உலக மொழிகளுக்கு இணைப்புப் பாலத்தை உருவாக்கியுள்ளது.
இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துவிட்டு, அதில் உள்ள கேமராவின் வழியே ஆங்கில வார்த்தையை காண்பித்தால்போதும், அந்த வார்த்தையின் தமிழாக்கத்தை அடுத்த நொடியே செல்லிடப்பேசி திரையில் பார்க்கலாம்.
இதற்கு "வேர்ட் லென்ஸ்' என்று கூகுள் நிறுவனம் பெயரிட்டுள்ளது. இந்த வேர்ட் லென்ஸ் சேவை தமிழ் மொழி மட்டுமின்றி, வங்கமொழி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, தெலுங்கு, உருது, ஹிந்தியிலும் கிடைக்கிறது.
ஸ்பானிஸ், பிரெஞ்ச், ஜெர்மன் என 37 மொழிகளை ஆங்கிலத்தில் துல்லியமாக மொழி பெயர்ப்பு செய்யும் சேவையை கூகுள் நிறுவனம் அளித்துள்ளது. இதன் மூலம் மொழியே தெரியாத நாட்டுக்குச் சென்றாலும் "வேர்ட் லென்ஸ்' மூலம் வழிகாட்டும் பலகைகள், அறிவிப்பு பலகைகளில் உள்ள அந்நாட்டு மொழி எழுத்துகளை உடனடியாக மொழி பெயர்ப்பு செய்து பார்த்து, பயன் பெறலாம்.
அதுமட்டுமின்றி, பிற மொழியின் பேச்சு ஓசையை வைத்தே இந்த கூகுள் மொழிபெயர்ப்பு ஆப் துல்லியமாக மொழிபெயர்ப்பு செய்கிறது. உதாரணமாக, ஸ்பெயின் நாட்டில் டாக்ஸியில் பயணம் செய்யும் தமிழ் மொழி மட்டும் அறிந்த ஒருவர், ஓட்டுநரின் ஸ்பானிஸ் மொழியை மொழியாக்கம் செய்ய, செல்லிடப் பேசியை அவருக்கு அருகே கொண்டு சென்றால்போது, அவரது ஸ்பானிஸ் மொழியின் ஓசை உடனடியாக தமிழாக்கம் செய்யப்பட்டு செல்லிடப்பேசியின் திரையில் காண்பித்துவிடுகிறது இந்த ஆப்.
மொழியின் ஓசை மூலம் 32 மொழிகளை மொழிபெயர்ப்புச் சேவையை கூகுள் வழங்குகிறது. அதேபோல், செல்லிடப்பேசிக்கு வரும் ஆங்கில குறுந்தகவல்களையும் இந்த ஆப் உடனடியாக தமிழில் மொழிபெயர்ப்பு செய்துவிடுகிறது.
கூகுள் மொழிபெயர்ப்பு ஆப்பை பதிவிறக்கம் செய்து கொண்ட பிறகு, பிற மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் பைல்களை தனித்தனியாக தேர்வு செய்து நிரந்தரமாக மீண்டும் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால், இன்டெர்நெட் வசதி இல்லாமலும் இந்த மொழிபெயர்ப்பு சேவையைப் பெறலாம். இந்த முறையில் 100க்கும் மேற்பட்ட மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யலாம்.
உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தி வரும் இந்த மொழிபெயர்ப்பு ஆப்- இன் பயன்பாடு, கடந்த 2 மாதங்களில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT