வாங்க இங்கிலீஷ் பேசலாம் 147
புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரின் காத்திருக்கும் அறையில் இருக்கிறார்கள்.
புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரின் காத்திருக்கும் அறையில் இருக்கிறார்கள். அப்போது கணேஷ் ஆங்கிலத்தின் வசைச்சொற்கள் பற்றி புரொபஸரிடம் வினவுகிறான். அப்போது அவர் இங்கிலாந்தில் உள்ள Skidbrook என்ற ஊரின் பெயரில் ஒளிந்துள்ள ஒரு வசைச் சொல்லைப்பற்றி பேசுகிறார்.
புரொபஸர்: Schitebroc என்ற பெயரில் Skidbrook பழங்காலத்தில் அழைக்கப்பட்டது. அப்போது இது மேய்ப்பர்கள் வசித்த, கழிவுகள் ஆறாக ஓடிய, ஒரு சேரிப்பகுதி.
Schite என்றால் shit. Broc என்றால் brook. Brook என்றால் சிற்றாறு.
கணேஷ்: இப்போது அர்த்தம் விளங்குது சார். மல ஓடை.
புரொபஸர்: ஆமாம். பின்னர் இங்கிலாந்து காலனியாதிக்கம் செய்து உலகை வென்று செல்வந்த தேசம் ஆன பின் இந்த சேரி வளர்ந்து ஊர் ஆனது. இப்படி வசதியான ஊர் ஆனதும் ஷிட் என்ற சொல் மருவி ள்ந்ண்க் என்று ஆனது. இன்னொரு விசயம். ஷிட் என்பது ஆங்கிலத்தில் உள்ள மிக பழைமையான சொல் தெரியுமா?
கணேஷ்: மக்கள் சமீபத்தில் தான் எதாவது விசயத்தில் கடுப்பானால் "ஷிட் ஷிட்' என சொல்ல ஆரம்பித்தார்கள் என நான் நினைத்தேன்.
புரொபஸர்: நீ சொல்வது உண்மை தான். ஷிட் ஆரம்பத்தில் ஒரு சாதாரண சொல்லாக இருந்தது. உதாரணமாய், முன்பு ஆடுகளுக்கு பேதியாவதற்கான மருத்துவ சொல்லாகவே ஷிட் இருந்தது. ஆடு மேய்ப்பர்கள் மத்தியிலே இச்சொல் பிரசித்தமாக இருந்தது. Schitebroc என்ற ஊரின் பெயரிலே ஷிட் இருக்கிறது. ஏனென்றால் ஆதியில் அங்கு ஆடு மேய்ப்பர்கள் அதிகம் இருந்தனர். ஆரம்பத்தில் மேய்ப்பர்களின் மருத்துவச் சொல்லாக புழங்கிய ஷிட், பின்னர் அவர்களின் கால்நடைகள் கழிவுகள் சரியான சுத்திகரிப்பு இன்றி அதிகம் அங்கு தேங்கி இருந்ததால் ஊருக்கே பொருத்தமானதாக கருதப்பட்டு நிலைபெற்றது.
மருத்துவரின் மணி அடிக்கிறது. உதவியாளர் உள்ளே சென்று பிங்கியை கையைப் பிடித்து அழைத்து வருகிறார். அவரது கண்களில் நீர் நிறைந்து முகம் சிவந்திருக்கிறது.
பிங்கியின் பின்னால் அவரது நாய் டார்லிங் அசட்டையாய் நாற்காலி, மேஜை கால்களை முகர்ந்தபடி வருகிறது.
ஜூலி: I am glad…
கணேஷ்: ஏன்?
ஜூலி: டார்லிங் அழலையே
கணேஷ்: அடப்பாவி
உதவியாளர்: மிஸ்டர் புரொபஸர்
புரொபஸர் எழுந்து நிற்கிறார்.
உதவியாளர்: மிஸ் மீனாட்சி
புரொபஸர்: அவள் வரவில்லை
உதவியாளர் புருவத்தை உயர்த்தி புரொபஸரை சில நொடிகள் பார்க்கிறார்.
புரொபஸர்: அவளுக்குத் தான் பார்க்கணும். ஆனால் அவள் வரல. பதிலா என் கூட என் ஸ்டுடெண்ட் கணேஷ் வந்திருக்கிறான்.
உதவியாளர்: பேஷண்ட் யாரு?
புரொபஸர்: அதான் குழப்பமாக இருக்குது
கணேஷ்: சார் ஜூலின்னு சொல்லுங்க
புரொபஸர்: It is very complicated you see. (உதவியாளரிடம்) என்னோட நாய் ஜூலி கூட வந்திருக்குது. அவனும் ரொம்ப
பாதிக்கப்பட்டிருக்கிறான்.
உதவியாளர் (பரிவாக): We provide inclusive treatment and care. ஒரு குடும்பத்தில் சிக்கல் ஏற்படும் போது எல்லாரும் தான்
பாதிக்கப்படுறோம். நேத்து ஒரு அம்மா அவங்க தங்க மீன்களை குடுவையில் கொண்டு வந்திருந்தாங்க. எங்க உங்க ஜூலி?
ஜூலி டார்லிங்கின் முன்னே போய் நிற்க இரு நாய்களும் வாலை அசைத்து அன்பை பரிமாறிக் கொள்கின்றன.
புரொபஸர்: ஜூலி
ஜூலி அவரை புறக்கணிக்கிறது.
புரொபஸர்: He is like a dog with two tails now…
கணேஷ்: அதென்ன ரெண்டு வால்? ரெட்டை வால் குருவி கேள்விப்பட்டிருக்கேன்.
புரொபஸர்: நீ வா. போகும் போது சொல்றேன்...
அவர்கள் மருத்துவர் அறைக்கு செல்ல ஜூலி அவர்கள் பின்னால் ஓடுகிறது.
புரொபஸர்: ஒருவர் ரெண்டு வால்கள் கொண்ட நாயைப் போன்றிருக்கிறார் என்றால் அவர் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறார் என அர்த்தம். உதாரணமாக, "விண்ணைத்
தாண்டி வருவாயா' படத்தில் த்ரிஷா தன் திருமணத்தின் போது தேவாலயத்தில் வைத்து எல்லார் முன்னிலையிலும் அதிரடியாய் தனக்கு அத்திருமணத்தில்
விருப்பமில்லை என தெரிவிக்கிறாள். அப்போது Simbu is like a dog with two tails.
(இனியும் பேசுவோம்)