இளைஞர்மணி

பெர்பியூஷன் டெக்னாலஜி மருத்துவப் படிப்பு! 

DIN

மருத்துவத்துறையில் மருத்துவராவதற்காக படிப்பது மட்டுமே மருத்துவ படிப்பல்ல. மருத்துவத்துறையில் பல்வேறு தொழில்நுட்பப் படிப்புகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அதில் மருத்துவர்களுக்கு உதவியாக பல்வேறு தொழில் நுட்ப உதவியாளர்கள் ஆவதற்கான படிப்புகளும் உள்ளன. அதுகுறித்து பலருக்கு தெரிவதில்லை.
மருத்துவத்துறையில் இருதய நோய் பிரிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இருதய சிகிச்சை நிபுணர்களால் மேற்கொள்ளப்படும் இருதய அறுவை சிகிச்சையின் போது அறுவை சிகிச்சை அரங்கில் மருத்துவருக்கு உதவியாக இருக்கும் முக்கியமானவர் பெர்பியூஷனிஸ்ட் என்னும் தொழில் நுட்ப உதவியாளர். 
அத்தகைய பெர்பியூஷனிஸ்ட் ஆக வேண்டுமானால் அது சம்பந்தமான படிப்பைப் படிக்க வேண்டும். பிஎஸ்சி பெர்பியூஷன் டெக்னாலஜி, எம்.எஸ்சி. பெர்பியூஷன் டெக்னாலஜி படிப்புகள் பல்வேறு கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.
பெர்பியூஷன் டெக்னாலஜி படிப்புகளை நடத்தும் சில கல்வி நிறுவனங்கள் :
A.J. Institute of Medical Sciences & Research  - http://ajims.edu.in/
WebPages/Default.aspx
EMPIRE COLLEGE OF SCIENCE -http://www.empirecollege.in/
Frontier Lifeline Hospital  - http://www.frontierlifeline.com/
Jawaharlal Institute of Postgraduate Medical Education and 
Research (JIPMER) - http://jipmer.edu.in/
Kerala University of Health Sciences - http://kuhs.ac.in/
KLE Academy of Higher Education & Research - http://kledeemed
university.edu.in/
MMM College of Health Sciences - http://mmmchs.org/index.php
Manipal College of Allied health sciences - https://manipal.edu/
soahs-manipal.html
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT