இளைஞர்மணி

உலக பெண் குழந்தைகள் தினம்

தினமணி

திருப்போரூர் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் அகில உலக பெண் குழந்தைகள் தினம் (அக்டோபர் 11), திருப்போரூர் எவர் கிரீன் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 இந்த நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியை உஷாராணி தலைமை வகித்தார். நீடு அறக்கட்டளை இயக்குநரான ஆசிரியர் ராமச்சந்திரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர், பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் சமூகக் கொடுமைகள், அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிமுறைகள், பல்வேறு தாக்குதல்களில் இருந்து பெண் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டிய அவசியம் ஆகியவற்றை எடுத்துக் கூறினார்.
 மேலும், பெண் குழந்தைகளுக்கு எதிராக அனைத்து இடங்களிலும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், வன்கொடுமைகளை ஒழித்திட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார். நிகழ்ச்சியின் இறுதியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிசெய்யவும், பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் தீமைகளை எதிர்த்துப் போராடவும் வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT