நீர் ஆதார திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனங்களில் பணிபுரிய விரும்புகிறவர்கள் நேஷனல் வாட்டர் அகாடமி நடத்தும் பயிற்சிகளைப் பெறலாம்.
உலக மக்கள் அனைவருக்கும் நீர் என்பது மிகவும் முக்கியமான அடிப்படைத் தேவையாக உள்ளது. நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும், புதிதாக உருவாக்குவதற்கும் பல்வேறு திட்டங்க ள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்தகைய சூழ்நிலையில் நீர் ஆதார திட்டங்களை செயல்படுத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப பொறியாளர்கள், பணியாளர்களுக்கு தேவைப்படும் பயிற்சியை மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் "நேஷனல் வாட்டர் அகாடமி' நடத்தி வருகின்றது. அரசு மற்றும் தனியார் நிறுவன பொறியாளர்கள், பணியாளர்கள் மட்டுமல்லாது தனி நபர்களுக்கும் பயிற்சியை வழங்கி வருகின்றது.
நீர் ஆதார திட்டங்களை செயல்படுத்தும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிய விரும்புகிறவர்கள் தங்கள் கல்வித் தகுதியோடு நேஷனல் வாட்டர் அகாடமி நடத்தும் பயிற்சியைப் பெற்றால் அத்தகைய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைப்பது எளிதாகும்.
மேலும் விவரங்களுக்கு :
National Water Academy
Pune-Sinhagad Road,
Khadakwasla,
Pune - 411 024,
Maharashtra (India)
மேலும் விவரங்களுக்கு:
http://nwa.mah.nic.in/index.htm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.