இளைஞர்மணி

பழக்க, வழக்கங்கள்!

நாம் திரும்பத் திரும்பச் செய்யும் எதுவுமே நமது பழக்கமாகிவிடுகின்றது. நாம் ஒன்றைச் செய்வதன் மூலமாகக் கற்றுக் கொள்கிறோம்.

DIN

நாம் திரும்பத் திரும்பச் செய்யும் எதுவுமே நமது பழக்கமாகிவிடுகின்றது. நாம் ஒன்றைச் செய்வதன் மூலமாகக் கற்றுக் கொள்கிறோம். தைரியமாக நடப்பதன் மூலமாகத் தைரியத்தைக் கற்றுக் கொள்கிறோம். நேர்மையையும், நடுநிலைமையையும் பயிற்சி செய்வதால் இத்தகைய பண்புகளைக் கற்றுக் கொள்கிறோம். இத்தகைய பண்புகளைப் பயிற்சி செய்வதால் நாம் அதில் தேர்ச்சி அடைந்துவிடுகிறோம். நேர்மையின்மை, நியாயமின்மை அல்லது கட்டுபாடின்மை போன்ற எதிர்மறைப் பண்புகளைப் பயிற்சி செய்தால், அவற்றில்தான் நாம் தேர்ச்சியடைவோம். மனப்பாங்குகளும் பழக்க வழக்கங்களாகும். இவையே பண்பு அமையும் முறைகளாகும். இவையே நமது மனநிலையாகி நமது செயல்களைத் தீர்மானிக்கின்றன.
 நமது பெரும்பாலான நடத்தைகள் பழக்கப்படுத்துவதின் விளைவேயாகும். இவை பழக்கமாகின்றன. நாம் எதையாவது நன்றாகச் செய்ய வேண்டும் என்றால் அது தன்னியல்பாகவே வர வேண்டும். சரியானவற்றைச் செய்வது பற்றித் திட்டமிட்டு, அதைப் பற்றியே நினைத்துக் கொண்டு செய்தால், அதை ஒருபோதும் சரியாகவே செய்ய முடியாது. அதாவது நாம் அதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். எல்லாருமே சூழலாலும், தொலைக்காட்சி, சினிமா, ரேடியோ போன்றவற்றாலும் பழக்கப்படுத்தப்பட்டு ரோபோக்களைப் போல நடந்து கொள்ளத் தொடங்குகிறோம். நல்ல முறையில் நம்மை நாமே வழக்கப்படுத்திக் கொள்வது நம் பொறுப்பாகும்.
 நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்கு கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது சுலபமேயாகும். தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும்.
 பி.எஸ்.எஸ்.ஜெகன் எழுதிய "தோழா... நீதான் தலைவன்' என்ற நூலிலிருந்து...
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

பெண் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரிக்கை

நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை: திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரல்

SCROLL FOR NEXT