முகப்பு
இளைஞர்மணி

தீநுண்மிகளை அழிக்கும் புதிய கருவி!

கரோனா தீநுண்மி தொற்று ஏற்படாமல் இருக்க நாம் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. கைகளைப் பலமுறை கழுவுவதுடன்,  நாம் வெளியில் இருந்து வாங்கி வந்த  காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் போன்ற

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:


கரோனா தீநுண்மி தொற்று ஏற்படாமல் இருக்க நாம் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. கைகளைப் பலமுறை கழுவுவதுடன், நாம் வெளியில் இருந்து வாங்கி வந்த காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் போன்ற எல்லாவற்றையும் கரோனா தொற்றிலிருந்து தூய்மைப்படுத்துவது மிக மிகத் தேவையான பணியாக மாறிவிட்டது.

எல்லாரும் அவர்களுக்குத் தெரிந்த முறைகளில் இந்தத் தூய்மைப்படுத்தும் வேலையைச் செய்கிறார்கள். சோப்பு போட்டுக் கழுவமுடியாத செல்போன், ரூபாய் நோட்டுகள், மடிக்கணினிகள், புத்தகங்களைத் தூய்மைப்படுத்த புற ஊதாக்கதிர்களைப் பயன்படுத்தித் தூய்மைப்படுத்தும் கருவிகள் பல வந்துவிட்டன. பெரிய நிறுவனங்கள், வசதியானவர்கள் இந்தக் கருவியை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் இதில் சில குறைகள் இருக்கின்றன. புறஊதாக் கதிர்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் வைரஸ் தொற்றியுள்ள பொருள்களில் பட வேண்டும். அப்போதுதான் வைரஸ் அழியும். ஒரு பொருளின் ஒருபுறத்தில் புற ஊதாக் கதிர்கள் பட்டால் அது படும் பகுதியில் உள்ள வைரஸ்கள் மட்டும் அழிந்துவிடும். அந்தப் பொருளின் இன்னொரு பகுதியில் புற ஊதாக் கதிர்கள் படவில்லை என்றால் அழியாது.

மேலும் இந்த புறஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி வைரûஸ அழிக்கும் கருவிகளின் விலையும் அதிகம். தப்பித் தவறி மனிதர்களின் மீது இந்தக் கதிர்கள் பட்டுவிட்டால், பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

இந்தக் குறைகள் எதுவும் இல்லாத, விலை குறைவான ஒரு வைரஸ் அழிப்புக் கருவியை தெலங்கானா மாநிலம் வாராங்கல்லில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி - என்ஐடி) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகப் பணிபுரியும் டி.ஹரணாத் மற்றும் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் பி.சந்தர்ராவ் ஆகிய இருவரும் சேர்ந்து இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தக் கருவியில், வைரஸ்களை அழிப்பதற்காக எந்தவொரு வேதிப் பொருளையும் பயன்படுத்தவில்லை. எந்தவிதமான புற ஊதாக் கதிர்களையும் பயன்படுத்தவில்லை. இவர்கள் பயன்படுத்தியது எல்லாம் ஓúஸான் என்ற வாயுப் பொருளைத்தான்.

""நம் எல்லாருக்கும் தெரியும், கரோனா வைரஸ் எல்லா இடங்களிலும் இருக்கிறது என்று. அது காட்டுத் தீ போல வெகுவேகமாக பலவிதங்களில் பரவி வருகிறது. கரோனா வைரûஸ அழிக்கக் கூடிய எந்தக் கருவியும் வேறு தீங்குகளை ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும். அதேநேரம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எல்லாப் பொருள்களிலும் படிந்துள்ள கரோனா வைரûஸ அழிப்பதாகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட கருவியைப் பற்றி சிந்தித்ததன் விளைவுதான் இந்த ஓசோநிட் (ஞக்ஷ்ர்சஐப). ஓசோன் வாயுவைக் கொண்டு வைரûஸ அழிக்கும் இந்தக் கருவியைச் செய்ய ஒரு மாதமே எங்களுக்குத் தேவைப்பட்டது'' என்கிறார் ஹரணாத்.

ஹரணாத் இதற்காக பழைய குளிர்சாதனப் பெட்டியை வாங்கியிருக்கிறார். அதில் உள்ள பல பகுதிகளைப் பிரித்து எடுத்துவிட்டு, அதில் ஓசோன் ஜெனரேட்டர் ஒன்றை அதன் மேல் பகுதியில் பொருத்தி இருக்கிறார். இந்த ஓசோன் ஜெனரேட்டர் மின்சக்தியைப் பயன்படுத்தி இயங்கக் கூடியது. ஒரு சிறிய சிஎஃப்எல் டியூப்பில் அதிக மின் அழுத்தம் உள்ள மின்சாரத்தைச் செலுத்தும்போது, காற்றில் உள்ள ஆக்சிஜன் சிதைந்து ஓசோனாக மாறுகிறது. இந்த ஓசோன் வாயு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் எல்லாப் பொருள்களின் மீதும் பட்டு, அவற்றில் உள்ள கரோனா வைரஸ், பூஞ்சைக் காளான், பாக்டீரியா என அனைத்தையும் (99.9%) 25 நிமிடங்களில் அழித்துவிடுகிறது. மீண்டும் ஓசோன் காற்றில் கலந்துவிடுகிறது.

ஒரு தடவை இந்தக் கருவியைப் பயன்படுத்தினால் வெறும் 13 வாட்ஸ் மின்சாரமே செலவாகிறது. இந்தக் கருவியில் வெவ்வேறு பொருள்களை வைக்க தனித்தனி பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காய்கறி, பழம் போன்றவற்றை தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு, இந்தக் கருவிக்குள் வைக்கச் சொல்கிறார் ஹரணாத்.

""ஓசோன் தண்ணீரில் மிக அதிக வினைபுரியும் தன்மை கொண்டது. தண்ணீரில் போடப்பட்ட பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் படிந்துள்ள தீநுண்மிகள், பாக்டீரியாக்களை அழிப்பது மட்டுமல்ல, அவற்றில் படிந்துள்ள வேதிப்பொருள்கள், பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வண்ணங்கள் ஆகியவற்றையும் ஓசோன் நீக்கிவிடுகிறது'' என்கிறார் அவர்.

இந்தக் கருவியை வீட்டுக்கு வெளியே தாழ்வாரத்தில் வைத்தால், வெளியிலிருந்து வாங்கி வந்த பொருள்களை எல்லாம் - ரூபாய் நோட்டு, காசு உட்பட- எல்லாவற்றையும் கருவிக்குள் வைத்துவிட்டால், 25 நிமிடங்களில் அவை தூய்மையாகிவிடும். உங்கள் செருப்புகளைக் கூட இந்தக் கருவியின் அடிப்பகுதியில் அதற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் வைத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கு முன்பு மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய மருத்துவ உபகரணங்களைத் தூய்மைப்படுத்த இந்த ஓசோன் வாயுவை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த அடிப்படையிலிலேயே நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களைத் தூய்மைப்படுத்த இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

""இந்தத் தூய்மைப்படுத்தும் கருவியைப் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் திறனுடைய உற்பத்தியாளர்கள் யாராவது என்னை அணுகினால், அவர்களுக்கு
இந்தக் கருவி எப்படி வேலை செய்கிறது, இதில் என்ன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதை சொல்லித் தர நான் தயாராக இருக்கிறேன். நாங்கள் தயாரித்திருப்பது ஓர் அடிப்படையான மாதிரிக் கருவிதான். இதை மேலும் மேம்படுத்த வேண்டும். டிஜிட்டல் ஸ்கிரீன் இணைக்கப்பட வேண்டும். கருவியின் அளவையும் மாற்ற வேண்டும். பொருள்களைத் தூய்மைப்படுத்த இந்தக் கருவி எடுத்துக் கொள்ளும் கால அளவைக் குறைக்க வேண்டும்'' என்கிறார் ஹரணாத்.

முழு கட்டுரையைப் படிக்க →