முகப்பு
இளைஞர்மணி

1901 முதல் 2020 வரை...

1901 முதல் 2020 வரை இலக்கியத்தில் தனிப்பட்ட நபர்களுக்கு 109 பரிசுகள், இருவருக்குக் கூட்டாக 4 பரிசுகள் என்று மொத்தம் 113 பரிசுகள் வழங்கப் பட்டிருக்கின்றன.

Updated On : 8 டிசம்பர், 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM

1901 முதல் 2020 வரை இலக்கியத்தில் தனிப்பட்ட நபர்களுக்கு 109 பரிசுகள், இருவருக்குக் கூட்டாக 4 பரிசுகள் என்று மொத்தம் 113 பரிசுகள் வழங்கப் பட்டிருக்கின்றன.

இப்பரிசினை மிக இளம் வயதில் பெற்றவர் ருத்யார்டு கிப்ளிங். 1907 ஆம் ஆண்டில், அவருடைய 41வது வயதில் இப்பரிசினைப் பெற்றார். இப்பரிசினை மிக அதிக வயதில் பெற்றவர் டோரிஸ் லெஸ்ஸிங். இவர் 2007 ஆம் ஆண்டில், அவருடைய 88 வயதில் இப்பரிசினைப் பெற்றார் என்பது குறிப்பிடத்
தக்கது.

இப்பரிசினை செல்மா லேஜர்லாப் (1909), கிரேசியா டெலிடா (1926), சிக்ரிட் அண்ட்செட் (1928), பியர்ல் பக் (1938), கபீரியலா மிஸ்டிரல் (1945), நெல்லி சாக்ஸ் (1966), நடின் கோர்டிமெர் (1991), டோனி மோரிசன் (1993), விஸ்லவா சிசம்போர்ஸ்கா (1996), எல்பிரிட் செலினெக் (2004), டோரிஸ் லெஸ்ஸிங் (2007), ஹெர்டா முல்லர் (2009), ஏலிஸ் முன்ரோ (2013), ஸ்வெட்லனா அலெக்ùஸவிச் (2015), ஓல்கா டோகர்சக் (2018) எனும் 16 பெண்கள் பெற்றிருக்கின்றனர்.

Advertisement

அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர் லூயிஸ் கிளக்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2020) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1943 - ஆம் ஆண்டில் நியூ யார்க்கில் லூயிஸ் கிளக் பிறந்தார். அவர் யேல் பல்கலைக்கழகப் பேராசிரியர். 1968- ஆம் ஆண்டில் இவருடைய முதல் தொகுப்பான "ஃபர்ஸ்ட்பார்ன்' வெளியானது.

1992 -ஆம் ஆண்டில் வெளியான "வைல்ட் ஐரிஸ்' கவிதைத் தொகுப்பு, அவெர்னோ (2006), ஃபைத்ஃபுல் அண்ட் விர்ச்சுவஸ் நைட் (2014) ஆகிய தொகுப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அமெரிக்க இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கவராக லூயிஸ் கிளக் ஆகியிருக்கிறார்.
உலக அளவில் தரப்படும் புகழ்பெற்ற பரிசாக இது இருந்தாலும், இதை நிராகரித்தவர்களும் இருக்கிறார்கள்.

1958 - ஆம் ஆண்டில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போரிஸ் பாஸ்டனெக் என்பவரும், 1964 - ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஜீன் பால் சார்த்ரே என்பவரும் நோபல் பரிசினை நிராகரித்து விட்டனர்.

1914, 1918, 1935, 1940, 1941, 1942, மற்றும் 1943 ஆம் ஆண்டுகள் என்று ஏழு ஆண்டுகளில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு எவருக்கும் வழங்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.