இளைஞர்மணி

தொட வேண்டாம்!

கரோனா தொற்று வந்தாலும் வந்தது;  கைகளைத் தூய்மைப்படுத்தியே கைகள் தேய்ந்துவிடும்போல் இருக்கிறது.  

என்.ஜே.

கரோனா தொற்று வந்தாலும் வந்தது; கைகளைத் தூய்மைப்படுத்தியே கைகள் தேய்ந்துவிடும்போல் இருக்கிறது.
சில இடங்களில் சானிடைசர் நிரம்பி உள்ள அமைப்பை சுவரில் பொருத்தியிருப்பார்கள். அதன் மேல்பகுதியில் கைகளை வைத்து அழுத்தினால், சானிடைசர் கைகளில் வழியும். ஆனால் கைகளை அந்த அமைப்பில் வைத்து அழுத்தும்போது கைகளில் வைரஸ் இருந்தால் அதில் ஒட்டிக் கொள்ளும். பிறர் அதைத் தொடும்போது அவர் கைகளில் வைரஸ் தொற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதற்காக கால்களில் பெடலை அழுத்தினால், கைகளில் சானிடைசர் கொட்டும்விதமான கருவிகளும் வந்துவிட்டன.
கால்கள், கைகள் எதுவும் படாமலேயே கைகளை நீட்டினால் சானிடைசர் கைகளில் வழியும் ஓர் அமைப்பை நொய்டாவில் உள்ள ரியாட் லேப்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த சானிடைசர் கருவியிலிருந்து ஆல்கஹாலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சானிடைசர் வெளிவருகிறது.
இந்தக் கருவியில் அல்ட்ராசோனிக் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. கைகளில் கருவியின் அருகே கொண்டு சென்றதும் 5 - 6 மி.லி. சானிடைசர் 5 நொடிகளுக்குள் வழிகிறது. இது இரண்டு கைகளையும் தூய்மைப்படுத்தப் போதுமானதாக இருக்கிறது.
இந்தக் கருவியை நிறைய தனியார் மருத்துவமனைகள் வாங்கி பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்தக் கருவிக்கு டிஆர்டிஓ அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது’

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

ஒணம் குறித்து சா்ச்சை கருத்து: தனியாா் பள்ளி ஆசிரியை மீது வழக்கு

அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு: செப்.5-இல் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

காஸாவில் செய்தியாளா்கள் கொல்லப்படுவது அதிா்ச்சி- வெளியுறவு அமைச்சகம்

SCROLL FOR NEXT