இளைஞர்மணி

வேலை...    வேலை... வேலை...

பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிகல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பரிதி இரா. வெங்கடேசன்

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

பணி: என்ஜினியர்

மொத்த காலியிடங்கள்: 200
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. மெக்கானிக்கல் - 120
2. சிவில் - 30
3. எலக்ட்ரிகல் - 25
4. இன்ஸ்ட்ரூமென்டேஷன் - 25

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. ரூ.50,000 - ரூ.1,60,000

வயது வரம்பு : அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1180. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய:
https://hindustanpetroleum.com/hpcareers/documents/careers_pdf/Advertisement_HPCL_2021_Engineering.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.04.2021

என்பிசிசி நிறுவனத்தில் மேலாண்மைப் பயிற்சியாளர் பணி

பணி: மேனேஜ்மெண்ட் ட்ரெய்னி (சிவில்)
காலியிடங்கள்: 25

பணி: மேனேஜ்மெண்ட் ட்ரெய்னி (எலக்ட்ரிகல்)
காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிகல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 29 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 2020 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரு.500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.nbccindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.nbccindia.com/pdfData/jobs/Advt_MT_Civil_Elec_17032021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.04.2021

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 24
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

இஸ்ரோ சென்டர்ஸ் காலியிடங்கள்

பணி: அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிஸர் - 04
பணி: அக்கவுண்ட்ஸ் ஆபிஸர் - 04
பணி: பர்சேஸ் & ஸ்டோர்ஸ் ஆபிஸர் - 09

டிபார்ட்மெண்ட் ஆஃப் ஸ்பேஸ் காலியிடங்கள்

பணி: அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிஸர் - 02

தகுதி: எம்பிஏ பட்டப்படிப்புடன் ஓராண்டு பணி அனுபவம் அல்லது முதுநிலைப் பட்டப் படிப்புடன் 3 ஆண்டு பணி அனுபவம் அல்லது இளங்கலைப் பட்டப் படிப்புடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அக்கவுண்ட்ஸ் ஆபிஸர் - 02

தகுதி: ஏசிஏ, எஃப்சிஏ, ஏஐசிடபிள்யூஏ, எம்பிஏ முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் அல்லது எம்.காம் பட்டப் படிப்புடன் 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் அல்லது பி.காம், பிபிஏ, பிபிஎம் படித்துவிட்டு 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: பர்ச்சேஸ் & ஸ்டோர்ஸ் ஆபிஸர் - 03

தகுதி: மார்க்கெட்டிங் அல்லது மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட் பிரிவில் எம்பிஏ முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் அல்லது மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட் பிரிவில் இளங்கலை, முதுநிலைப் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் அல்லது முதுகலைப் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் அல்லது இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்துவிட்டு 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் ரூ. 56,100

வயது வரம்பு : 21.04.2021 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் ஏதேனும் ஒரு பணிக்காக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்கள் அறிய https://www.isro.gov.in/sites/default/files/bilingual.advt_.officers.2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.04.2021

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 367

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: சோப்தார் - 40
பணி: அலுவலக உதவியாளர் - 310
பணி: சமையல்காரர் - 01
பணி: வாட்டர்மேன் - 01
பணி: ரூம் பாய் - 04
பணி: காவலாளி - 03
பணி: புத்தக மீட்டமைப்பாளர் - 02
பணி: நூலக உதவியாளர் - 06

சம்பளம்: மாதம் ரூ.15,700 - ரூ.50,000

வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தகுதி: எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வீட்டு பராமரிப்பில் அனுபவம், சமைப்பதில் அனுபவம் போன்ற தகுதிகளை பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதவற்ற விதவைகள் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதில் முழு விலக்களிக்கப்படுகிறது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 (ஒவ்வொரு பணிக்கும்) கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பொது எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.04.2021

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் அல்லது https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_36_2021_eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.04.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT