இளைஞர்மணி

செவ்வாய் கிரக பயணம்... தயாராகும் நாசா!

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் நீண்டகாலத் திட்டத்தை நோக்கிய நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா.

எஸ். ராஜாராம்

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் நீண்டகாலத் திட்டத்தை நோக்கிய நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா. அதன் ஒரு பகுதியாக செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற ஓராண்டு அனுபவத்தைப் பெறுவதற்கு தன்னார்வலர்களைத் தேடத் தொடங்கியுள்ளது.

இதற்காக ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் 1700 சதுர அடியில் செவ்வாய் கிரக சூழலுடன் கூடிய ஓர் இடத்தை உருவாக்கியுள்ளது. ஒரு டென்னிஸ் கோர்ட்டை விட சிறியதாக இந்த இடம் இருக்கும். இதில் பங்கேற்க இதுவரை 4 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

இவர்கள் இந்த உருவாக்கப்பட்ட அறையில், செவ்வாய் கிரகத்தில் ஏற்படக்கூடிய தகவல் தொடர்பு தாமதம், உபகரணங்களின் தோல்வி உள்ளிட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் உருவகப்படுத்தப்பட்ட விண்வெளி நடைப் பயிற்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சியையும் மேற்கொள்வார்கள். விண்வெளிப் பயணத்தின்போது, விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படும் உணவே அவர்களுக்கு வழங்கப்படும். இதுபோன்ற 3 பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் 30-35 வயதுக்குள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்; அறிவியல் அல்லது பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்; அமெரிக்க குடிமக்கள் அல்லது நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பன போன்ற நிபந்தனைகளையும் நாசா விதித்துள்ளது. இதை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராகும் பணி என நாசா தெரிவித்துள்ளது. 2030-களில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கான திட்டத்துக்கு இந்த ஆராய்ச்சி உதவும் எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT