வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 279
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. தேர்தல் ஆணைய குறுநில மன்னர் ராஜராஜ கம்பீர சேதிராயன் நடக்கவிருக்கும் தேர்தலை நடத்தும் பொருட்டு ஒரு புது எந்திரத்தைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி அதைக் கொண்டு வருகிறார். அது மூட்டை ஒன்றைச் சுமந்த, அதன் மீது பட்டுச் சால்வை போர்த்திய நான்கு கால் பிராணி. அதைக் கண்டதும் they have reinvented the wheel என புரொபஸர் கூறுகிறார். அந்த எந்திரம் தான் என்ன? பார்ப்போமா?
ராஜராஜ கம்பீர சேதிராயன்: மன்னர் மன்னா, இனிமேல் நம் மக்கள் சிரமப்பட்டு வாக்களிக்க தேவையிருக்காது. இந்த எந்திரமே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும்.
வீரபரகேசரி: Bravo!
கணேஷ்: என்ன பிராவோவா? அவர் சி.எஸ்.கே பிளேயர் இல்ல?
ஜூலி: அட நீ வேறே... அவர் வேற, இது வேற?
கணேஷ்: என்ன வேற?
ஜூலி: Bravo என்றால் ஒருவர் ஒரு விசயத்தை சிறப்பாகச் செய்யும் போது அதைப் பாராட்டுவதற்காகச் சொல்வது.
தமிழில் நாம் சிறப்பு, பிரமாதம், சபாஷ் என பாராட்டுவோமே அதுதான் ஆங்கிலத்தில் bravo. Well done. Take a bow ஆகிய பிரயோகங்கள். பெரும்பாலும் ஒரு நடிகனோ பாடகனோ
நடிகையோ சிறப்பாக ஒரு performance கொடுக்கும் போது bravo என பாராட்டுவது வழக்கம்.
கணேஷ்: இது ஆங்கில வார்த்தையா?
ஜூலி: இல்லை. இது ஓர் இத்தாலிய சொல். இத்தாலியில் சரி, நல்லது, பாராட்டுகள் என பல பொருட்களில் இச்சொல்லைப் பயன்படுத்துவார்கள். ஆண்களிடம் bravo என்றால் பெண்களிடம் brava என்பார்கள். நிறைய பெண்கள் என்றால் சரிம்மா எனும் பொருளில் brava என சொல்வார்கள். ஆனால் ஆங்கிலத்திலோ ஆணோ பெண்ணோ நிறைய பேரோ ஒரே bravo தான்.
கணேஷ்: எங்களுக்கு சி.எஸ்.கே என்றால் மட்டும் தான் பிராவோ.
ஜுலி: ம்க்கும்.
வீரபரகேசரி: ஓகே. please demonstrate.
ராஜராஜ கம்பீர சேதிராயன் அந்த எந்திரத்தின் அருகே செல்கிறார்.
கணேஷ்: எனக்கு ஒரு சந்தேகம். இந்த demonstrate இல் இருந்து தான் demo வந்துச்சா?
ஜூலி: ஆமா. Demonstration என்றால் ஒரு பொருளோ
விசயமோ எப்படி வேலை செய்கிறது எனக் காட்டி விளக்குவது. அதன் சுருக்கமே க்ங்ம்ர். வீட்டில் வாஷிங் மெஷின் வாங்கினால் டெமோ காட்டுவதற்கு ஒரு டெக்னிக்கல் ஆள் வருவார் இல்லையா? அதே போல ஒரு மென்பொருளோ இசை ஆல்பமோ சாம்பிளாக பரிசோதிப்பதற்கு, கேட்டு எதிர்வினை தருவதற்காக நமக்கு அளிக்கப்பட்டால் அதுவும் டெமோ தான். Demo software ஓர் உதாரணம். கடைசியாக ஓர் அரசியல் பேரணி அல்லது ஆர்ப்பாட்டத்தையும் political demonstration அல்லது demo என சொல்வார்கள். வா இந்த வாக்கு எந்திர டெமோவைப் பார்ப்போம்.
ராஜராஜ கம்பீர சேதிராயன் அந்த எந்திரத்திடம் சென்று அதன் துணியை விலக்குகிறார். கழுதையின் முகம் தென்
படுகிறது. எல்லாரும் அதிர்ச்சியாகிறார்கள்.
வீரபரகேசரி: என்ன இது?
ராஜராஜ கம்பீர சேதிராயன்: மன்னா இது அற்புதமாக வேலை செய்யும் பாருங்கள்.
(அவர் அதன் மூட்டையில் இருந்து ஒரு வாக்குச்சீட்டுகளை உருவி அதற்கு தின்னக் கொடுக்கிறார். அது ஆர்வமாக வாங்கி மெல்லுகிறது. அடுத்து அவர் கழுதையின் காதிடம் சென்று
மன்னர் வீரபரகேசரி வாழ்க எனச் சொல்கிறார். உடனே கழுதை வாயைத் திறந்து சீட்டை கக்குகிறது. அதை எடுத்து ராஜராஜ கம்பீர சேதிராயன் எல்லாரிடமும் காட்டுகிறார். அதில் மன்னரின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது.)
வீரபரகேசரி: சிறப்பு!
ராஜராஜ கம்பீர சேதிராயன்: ரொம்ப சிம்பிள் மன்னா.
வீரபரகேசரி கழுதையின் காதில் சென்று சொல்கிறார்: லூசு கருமாந்திரம் வாழ்க!
கழுதை மீண்டும் வாக்குச்சீட்டை கக்குகிறது. அதிலும்
மன்னரின் சின்னம். எல்லாரும் மீண்டும் அதிர்ச்சியா
கிறார்கள்.
வீரபரகேசரி: என்னய்யா இது? எதிர்க்கட்சிகளுக்கு இது தெரிந்தால் நம்மை உதைப்பார்களே. வாக்கு எந்திர தில்லுமுல்லு என பத்திரிகைகள் எழுதுமே.
ராஜராஜ கம்பீர சேதிராயன்: இல்லை மன்னா. காதில் போய் என்ன சொன்னாலும் உங்களுக்கே வாக்கு விழும்படி பயிற்சி கொடுத்திருக்கிறோம் இந்த எந்திரத்துக்கு. எதிர்க்
கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்றால் இதன் வாலைப் பற்றி இழுக்க வேண்டும்.
கணேஷ்: அப்போ கழுதை உதைக்குமே!
ராஜராஜ கம்பீர சேதிராயன்: ஆமா அதே தான். அதனாலே எல்லா ஓட்டுகளும் நம் மன்னருக்கே விழும். யாருக்கு வாக்களித்தாலும் மன்னரே வெற்றியாளர். எப்படி நம் எந்திரம்?
வீரபரகேசரி: Bravo bravo. இந்தா பிடி ஆயிரம் பொற்காசுகள்!
(இனியும் பேசுவோம்)