இளைஞர்மணி

வேலை...வேலை...வேலை...

சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

பரிதி இரா. வெங்கடேசன்

உயர்நீதிமன்றத்தில் வேலை


பணியிடம்: சென்னை, மதுரை
மொத்த காலியிடங்கள்: 202

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
அடிஷனல் அட்வகேட் ஜெனரல் - 09
ஸ்டேட் கவர்ன்மென்ட் பிளீடர் - 01
கவர்ன்மென்ட் பிளீடர் - 01
ஸ்பெஷல் கவர்ன்மென்ட் பிளீடர் - 33
அடிஷனல் கவர்ன்மென்ட் பிளீடர் - 55
கவர்ன்மென்ட் அட்வகேட் (சிவில் சைடு) - 71
கவர்ன்மென்ட் அட்வகேட் (கிரிமினல் சைடு) - 29
கவர்ன்மென்ட் அட்வகேட் ( டேக்ஸஸ்) - 03

தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வயது வரம்பு: 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Secretary to Government, Public Department, Secretariat, Chennai - 600 009.

மேலும் விவரங்கள் அறிய: https://cms.tn.gov.in/sites/default/files/announcement/law_officers_appointment_150721.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.07.2021


என்பிசிஐஎல் நிறுவனத்தில் வேலை


பணி: ஃபிக்ஸடு டெர்ம் என்ஜினியர் 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1.சிவில் - 11
2. மெக்கானிக்கல்- 08
3. எலக்ட்ரிகல் - 04
4. சி&ஐ - இசி - 02
5. சி&ஐ - சிஎஸ்/ஐஎஸ் - 01

தகுதி: பொறியியல்துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.61,400

வயது வரம்பு: 29.07.2023 தேதியின்படி, 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பி.இ, பி.டெக் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://npcilcareers.co.in/KGS2021/candidate/Default.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.07.2021

தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறையில் வேலை


பணி: ஹேண்டிமேன்/ லோடர்

காலியிடங்கள்: 28

வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.14,014

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹிந்தியில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சூபர்வைஸர்
காலியிடங்கள்: 09

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,564

தகுதி: இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணி அறிவு, ஓர் ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய :
https://www.becil.com/uploads/vacancy/36175c865abf358d36f8036343f4ff6f.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.07.2021

பணி: சீனியர் பிஎச்பி டெவலப்பர் மற்றும் புராஜெக்ட் லீடர்
பணி: சீனியர் மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர்

தகுதி : கணினி அறிவியல், எம்.எஸ்சி(ஐடி), எம்சிஏ, பி.டெக், பி.இ தேர்ச்சியுடன்
9 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.68,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி, எஸ்டி, பொருளாதாரரீதியாக பின்தங்கிய பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.450 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www,becil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய:
https://www.becil.com/uploads/vacancy/3ce3501772b8277f36825b010b6d1997.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.07.2021

இந்திய கடற்படையில் வேலை

பணி: எலக்ட்ரிகல் பொறியியலாளர்

காலியிடங்கள்: 40

தகுதி: எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், பவர் இன்ஜினியரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமெண்டேசன், அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் போன்ற எதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். என்சிசி பயிற்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.

வயது வரம்பு: 02.01.1997 - 01.07.2002க்கும் இடைபட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பி.இ, பி.டெக் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் கடற்படை அதிகாரிகளால் நடத்தப்படும் எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.09.2021

தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, போபால், விசாகப்பட்டினம், கொல்கத்தா தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜனவரி 2022 -இல் பயிற்சி ஆரம்பமாகும்.

பயிற்சி அளிக்கப்படும் இடம்: Indian Naval Academy, Ezhimala, Kerala.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.07.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அபார வெற்றி - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT