இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பரிதி இரா. வெங்கடேசன்

இந்திய ராணுவத்தில் வேலை

பணி: என்ஜினியர் (டெக்னிகல் கிராஜுவேட் கோர்ஸ்) - டிஜிசி -134),

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.ரூ.56,100 - ரூ.1,77,500

வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி 20 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உடற்தகுதி: உயரம் 157.5 செ.மீட்டரும், உயரத்திற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். 15 நிமிடத்தில் 2.4 கி.மீ தூரத்தை ஓடிக் கடக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீட்டர் தூரம் ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 49 வாரம் பயிற்சி அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

மேலும் விவரங்கள் அறிய:
https://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/TGC_134_COURSE.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.09.2021

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வேலை

பணி: ரெவ்யூ ஆபீசர்
காலியிடங்கள்: 46

பணி: அசிஸ்டன்ட் ரெவ்யூ ஆபீசர்
காலியிடங்கள்: 350
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: கம்ப்யூட்டர் அசிஸ்டன்ட்
காலியிடங்கள்: 15
வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சட்டத்துறையில் ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் மற்றும் கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். NIELET/DOEACC போன்ற படிப்பில் ஓ லெவல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.nta.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://recruitment.nta.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.09.2021

இந்திய அஞ்சல் துறையில் வேலை

மொத்த காலியிடங்கள்: 09

பணி: ஸ்டாப் கார் டிரைவர்

வயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றவராகவும் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகன பழுது நீக்கும் பணிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.24,500 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் அறிய:

https://www.indiapost.gov.in அல்லது https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_17082021_OD_E.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.09.2021


கடலோர காவல் படையில் வேலை

பணி: சார்ஜ்மேன்
காலியிடங்கள்: 09

சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மரைன், உற்பத்தி போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொருள்களைப் பழுதுபார்க்கும் பணியில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோவில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://recruitment.nitt.edu/faculty2021/advt/1.a_General%20Information.pdf என்ற லிங்க்கில் சென்று பாருங்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.09.2021

தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 92
பணி: உதவி பேராசிரியர் - கிரேடு ஐஐ

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. ஆர்கிடெக்சர் - 04
2. கெமிக்கல் என்ஜினியரிங் - 02
3. கெமிஸ்ட்ரி - 05
4. சிவில் என்ஜினியரிங் - 13
5. கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங் - 05
6. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் - 07
7. எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் - 05
8. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் - 10
9. எனர்ஜி அண்ட் என்விரான்மென்ட் - 03
10. ஹியூமானிட்டிஸ் அண்ட் சோஷியல் சயின்ஸஸ் - 03
11.இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல் என்ஜினியரிங் - 04
12. மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் - 03
13. மேத்மெடிக்ஸ் - 04
14. மெக்கானிகல் என்ஜினியரிங் - 05
15.மெட்டர்ஜிகல் அண்ட் மெட்டீரியல் என்ஜினியரிங் - 08
16. பிசிக்ஸ் - 02
17. புரொடக்ஷன் என்ஜினியரிங் - 09

தகுதி: ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட துறையில் இளங்கலை, முதுநிலை, முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு
அரசின் விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.500. பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அன்லைன் விண்ணப்ப பிரிண்ட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar, NIT, Trichy - 620 015.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 04.10.2021

மேலும் விபரங்கள் அறிய: https://recruitment.nitt.edu/faculty2021/advt/1.a_General%20Information.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.9.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அபார வெற்றி - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT