இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 324

ஆர்.அபி​லாஷ்


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மனிதவளத்துறை அமைச்சரும் அவருடைய மகனுமாக நாற்பது போராட்டக்காரர்கள் மீது தேர்களை ஏற்றிக் கொன்றதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. மன்னர் வீரபரகேசரி மனிதவளத்துறை அமைச்சரின் மகனிடம் இதைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது சில ஆங்கிலச் சொற்கள் குறித்த விளக்கங்களை கணேஷும் ஜூலியும் விவாதிக்கிறார்கள். அதை ஒட்டி shampoo என்பது எப்படி ஓர்  இந்திய சொல்லில் இருந்து பிறந்த வார்த்தை என ஜூலி விளக்குகிறது. அப்போது தன்னுடைய நாட்டிய மணிமண்டத்தில் உள்ள ஆயிரம் அழகிய மங்கையர்களில் அனைவருமே தன்னை மட்டுமே காதலிப்பார்கள் என்று மன்னர் வீரபரகேசரி கூற, அதற்கு என்ன காரணம் என்று  கணேஷ் வினவ, அதற்கு  அவர் அவர்கள் தன்னை மட்டும் காதலிப்பதால் they live like a maggot in bacon என்று கூறுகிறார். கணேஷுக்கு அதன் பொருள் விளங்கவில்லை. என்னவென்று கேட்போமா?

கணேஷ்: மன்னா, maggot என்றால் புழு தானே?

வீரபரகேசரி: ஆமா, ஆனால் வெறும் புழு அல்ல. உணவு கெட்டுப் போகும் போது அதில் சிறுபூச்சிகள் முட்டையிடும். 

அம்முட்டைகளில் இருந்து வரும் புழுக்கள் அந்த உணவைத் தின்று வளர்ந்து பின்னர் பூச்சியாகிப் பறந்து வெளியேறும். பொதுவாக நம் உடம்பில் சதை அழுகினால் புழு வைப்பதாகச் சொல்வோம். அப்போது  இந்த maggots தான் சதைக்குள் தோன்றி ஒரு அமிலத்தை சுரந்து தசையை அழுக வைக்கும். இறந்து போனவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டால் அவற்றை அழுக வைத்து மண்ணோடு மண்ணாக்க உதவுவது maggots தான்.

கணேஷ்: சரி, இந்த புழுக்களுக்கும் அப்பெண்கள் என்னை ஏற்காததற்கும் என்ன சம்பந்தம்?

வீர்பரகேசரி: அடேய், bacon என்றால் பன்றிக்கறி.  அழுகத் தொடங்கும் பன்றிக்கறியில் ஒரு maggot தோன்றுகிறது. அது உணவைச் சாப்பிடவில்லை, உணவிலேயே வாழ்கிறது. உணவில் குடியிருந்தபடியே அதைத் தின்று அழித்து பெருக்குகிறது. பெரிய செல்வந்த வாழ்க்கை வாழ்கிறவர்களும் இப்படித்தான். இதைச் சொல்வதற்காகத் தான் ஜெர்மனியில் ஒருவர் செல்வச் செழிப்பாக வாழ்ந்தால் அவரை maggot in a bacon என்று சொல்கிறார்கள். இந்த ஆடல் மகளிர் என்னை நேசிப்பதால் அவ்வளவு படோடோபமாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். உன்னைப் போன்ற எளியோரை நேசித்தால் என்ன பிரயோஜனம்? அதனால் தான் she may give you pumpkin என்று சொன்னேன்.

கணேஷ்: காதல்  பணம், அழகு ஆகியவற்றை பார்த்து வராதது அல்லவா மன்னா?
வீரபரகேசரி: இந்த இரண்டை பாராமல் வருவது ஒன்றே.
கணேஷ்: எது?
வீரபரகேசரி: நோய். ஆனால் பெண்களின் காதல் தராதரம் பார்த்தே தோன்றும். 
கணேஷ்: ரைட்டு. பெண்கள் அழகை விரும்புவாங்களா? பணத்தை விரும்புவாங்களா?
வீரபரகேசரி: அவர்கள் இரண்டையுமே விரும்புவார்கள் என்பேன். ஆனால் இதுவா அதுவா எனும் கறாரான தேர்வு வந்தால், அழகான ஏழைக் காதலனா, அழகான 
பணக்கார கணவனா என்று வந்தால்...
கணேஷ்: வந்தால்?
வீரபரகேசரி: They would go for dumplings over flowers.

கணேஷ்: புரியல.
வீரபரகேசரி: Dumpling என்றால் சீனாவிலும் ஜப்பானிலும் கிடைக்கும் கொழுக்கட்டை.
கணேஷ்: ஆமா, குங்பூ பாண்டா படத்தில் பார்த்திருக்
கிறேன்.
வீரபரகேசரி: கொழுக்கட்டை பார்க்க அழகாக இருக்காது, ஆனா சாப்பிட்டா பசியாறும். பூக்களைப் பார்க்க அழகா 
இருக்கும். ஆனால் பசித்தால் அதைச் சாப்பிட முடியாது. எதுக்கு மதிப்பதிகம்?
கணேஷ்: அது நமக்கு பசிக்குதா இல்லையாங்கிறதைப் பொறுத்தது.
வீரபரகேசரி அவனை நோக்கி முறைக்கிறார்.
கணேஷ் பயந்து: இல்லை மன்னா dumplings தான் 
மதிப்பானது.
வீரபரகேசரி: அதனால் தான் you go for dumplings over flowers. இது ஜப்பானிய பழமொழி. அதனுடைய பொருள் to choose something useful over something pretty.
கணெஷ்: சூப்பர் மன்னா...
(அப்போது மனிதவளத்துறை அமைச்சர் பலவேசமும் 
அவருடைய மகனும் மன்னரிடம் வருகிறார்கள்)
அமைச்சர் பலவேசம்: மன்னர் மன்னா, எங்களுடைய 
பிரச்னைக்கு ஒரு தீர்ப்பு சொல்லலையே. 
பலவேசத்தின் மகன்: மன்னா, அவர்களாக வந்து தான் என்னுடைய தேரின் முன்னே விழுந்தார்கள். அது சமூக 
அமைதியைக் குலைப்பதற்கான தற்கொலைத் தாக்குதல். 
என் மீது எந்தத் தவறும் இல்லை.

(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT