மகளிர்மணி

17 வயதில் சாதனை!

DIN

அன்னி திவ்யா. இளம் வயதில்  சாதனை படைத்தவர்.  குறைந்த வயதில் போயிங் 777   விமானத்தை இயக்கும் பெண் விமான  ஓட்டி தான்  அன்னி திவ்யா. அன்னி,  விஜயவாடாவைச் சேர்ந்தவர்.

"விமான ஓட்டியாக வேண்டும் என்ற  எனது கனவை வெளிப்படுத்தியதும்  நான் சந்தித்தது விமர்சனங்கள்  மட்டுமே.   துணிந்து   பதினேழாம்   வயதில்  உத்தர பிரதேசம் ராய்பரேலியில் இருக்கும்  மத்திய   அரசின்  விமானம் ஓட்ட கற்றுத்தரும் பள்ளியில்  சேர்ந்தேன். பத்தொன்பதாவது வயதில்   ஏர் இந்தியா நிறுவனத்தில் பைலட்டாக  வேலையில் சேர்ந்தேன்.  போயிங்  737   விமானத்தை ஓட்டினேன். சீக்கிரமே  போயிங் 777   என்னும் பெரிய விமானம் ஓட்ட  வாய்ப்பு கிடைத்தது. வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன்.  

அப்பா ராணுவத்தில் பணி புரிந்தார்.   பதான்கோட்  ராணுவ  மையத்தின் அருகில் நாங்கள் வசித்தோம்.   பத்தொன்பது ஆண்டுகள் பணிபுரிந்து பிறகு  விருப்ப ஓய்வு பெற்று   விஜயவாடாவில்   நிரந்தரமாக  வசிக்க ஆரம்பித்தோம்.  நான் அரசு பள்ளியில்  படித்தேன். அப்பாவின்   ஓய்வூதியம்  குடும்பம் நடத்துவதற்கு போதாமல் இருந்தது. எனக்கு தெலுங்கு ஹிந்தி  பேச வரும். ஆங்கிலம்  பேச வராது. "ஆங்கிலம்  பேசத்  தெரியாமல்  எப்படி  விமானத்தில்  அறிவிப்பு செய்வாய்' என்று  கேலி செய்தார்கள்.   அதனால்   என்னவோ விமான ஓட்டியாக வேண்டும் என்ற  ஆவல் முன்பைவிட அதிகம் ஏற்பட்டது. 

உதவித் தொகை கிடைத்ததினால், விமானம்  ஓட்டும் பயிற்சியில் என்னால் சேர முடிந்தது. போயிங் 777 விமானத்தை ஓட்டும்  கனவும்  விரைவில்  நனவானது. விமானியாக வேலை பார்த்துக் கொண்டே  விமானயியலில்  பட்டப் படிப்பை நிறைவு செய்தேன். சொந்தமாக வீடு  வாங்கினேன். உடன் பிறப்புகளை வெளிநாட்டில்    படிக்க வைத்தேன்..''  என்கிறார்  சொந்தக் காலில் நிற்கும் அன்னி திவ்யா.
- பனிமலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT