மகளிர்மணி

அழகுக் குறிப்பு!

DIN

தோல் சுருக்கம்  நீங்க!
• 2 தேக்கரண்டி தேங்காய்ப்பாலுடன், ஒரு தேக்கரண்டி அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் தடவி கழுவினால், முகத்தில் சுருக்கம் நீங்கி இளமையாக இருக்கும்.

• உருளைக்கிழங்கை வேக  வைத்து  அரைத்து, அத்துடன் 2 தேக்கரண்டி ஆலிவ் ஆயில், 2 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து, வாரத்திற்கு 2-3 முறை கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கடலைமாவுப் போட்டு கழுவ வேண்டும்.

• முட்டையின் வெள்ளைக்கருவை தனியே எடுத்து, ஒரு கிண்ணத்தில் விட்டு அத்துடன் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கடலைமாவு போட்டு கழுவ வேண்டும். இப்படி  தொடர்ந்து  செய்து வந்தால்   கால்  கைகளில் உள்ள சுருக்கங்களை  நீக்கிவிடும்.

• தேங்காய் எண்ணெய்  ஒரு  தேக்கரண்டி, ரோஸ் வாட்டர்  ஒரு  தேக்கரண்டி, தயிர்  ஒரு  தேக்கரண்டி இந்த மூன்றையும் நன்றாக  கலந்து   முகத்தில்  தடவி   15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். வாரத்தில்  இரண்டு நாட்கள்   இப்படி செய்வதனால்  முக   சுருக்கங்கள் காணாமல்  போகும்.

சருமத்தில் எண்ணெய்ப் பசை நீங்க!
• எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள், சிறிது கடலை மாவுடன், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற  வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சருமத்தில்  எண்ணெய்ப் பசை  நீங்கி சருமம் பளபளப்பாகும்.

• முட்டையின் வெள்ளைக்கருவுடன், பால் மற்றும் கேரட் விழுது கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

• எண்ணெய்ப் பசை சருமத்தினர், அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். முகம் கழுவ சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறையும், முகமும் பளபளப்பாக இருக்கும்.

• 1 தேக்கரண்டி அரிசி  மாவு, 1 தேக்கரண்டி  கஸ்தூரி  மஞ்சள் தூள்,  2 தேக்கரண்டி பால் அனைத்தையும்  நன்கு  கலந்து  பேஸ்டாக்கி  முகம்  கழுத்து  இரண்டிலும்  நன்கு தடவி 10  நிமிடம்  மசாஜ் செய்து பின்பு கழுவவும். இது ஒரு நல்ல ஃபேஸ் ஸ்கரப்பர். வாரத்திற்கு 2  முறை இவ்வாறு செய்தால்   சருமத்தை மென்மையாக பராமரிக்க முடியும்.
- கலைச்செல்வி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT