மகளிர்மணி

சிந்து எனும் பிராண்டின் மதிப்பு!

தினமணி

விளம்பரங்கள் என்றால் சினிமா நட்சத்திரங்களுக்கு முதலிடம். அடுத்தபடியாக கிரிக்கெட் வீரர்கள்.  விளம்பரங்களில் வந்து போக தற்சமயம் அதிக தொகை வாங்குபவர் கிரிக்கெட் வீரர் விராத் கோலி. விளம்பரத் தயாரிப்பில் ஒருநாள் கலந்து கொள்ள கோலி இரண்டு கோடி வாங்குகிறாராம். 

கோலிக்கு அடுத்தபடியாக  ஊதியம் அதிகம் வாங்குவது வேறு எந்த கிரிக்கெட் வீரரும் கிடையாது. இறகுப் பந்தாட்ட வீராங்கனை பி.வி.சிந்துதான்.  ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து ஒன்னேகால் கோடி வரை சிந்து வாங்குகிறாராம்.  இறகுப் பந்தாட்டத்தில் முதல் ஐந்து தரத்திற்குள் சிந்து முன்னேறியிருப்பதால், விளம்பரங்களில் சிந்து நடிக்க வாங்கும் ஊதியமும் உயர்ந்துவிட்டது.

கிரிக்கெட் வீரர் தோனியையும், சக பெண் வீராங்கனைகளான சாயினா நேவால், சானியா மிர்சாவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு விளம்பரங்களில் நடிக்க அதிக ஊதியம் வாங்குவதிலும் சிந்து முன்னேறியிருக்கிறார். அடுத்த மூன்று ஆண்டுகளில் சிந்து விளம்பரங்கள் மூலமாக சுமார் ஐம்பது கோடிகள் வருவாயாகக் கிடைக்குமாம்.
- பனிமலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT