மகளிர்மணி

திரைப்படமாகிறது பி.வி.சிந்துவின் வாழ்க்கை!

DIN

"எது எப்போ நடக்கணுமோ அது அப்போ நடக்கும்' என்று சொல்வது எத்தனை உண்மை. இறகுப் பந்தாட்ட வீராங்கனையான பி.வி.சிந்து சர்வதேச பட்டியலில் மூன்றாவது இடத்தில் நிற்பவர். ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்காக முதல் வெள்ளிப் பதக்கம் பெற்று வந்தவர். இதுவரை சுமார் இருநூறு வெற்றிகளை குவித்திருப்பவர். எந்த தருணமும் சிந்துவின் வாழ்க்கை வெள்ளித்திரையில் வரலாம் என்ற எதிர்பார்ப்பு அநேகருக்கு இருந்தது உண்மை. அந்த எதிர்பார்ப்பினை நிஜமாக்கப் போகிறவர் ஹிந்தி வில்லன் நடிகர் சோனு சூட். (sood)

சிந்து ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் பெற்றதும், சிந்துவின் வாழ்க்கையைத் திரைப்படமாக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் கூடு கட்டத் தொடங்கிவிட்டது. கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் கிடைத்து வந்த இங்கு இப்போது இறகுப் பந்து, ஹாக்கி, கபடி, குஸ்தி என்று பல விளையாட்டுகள் பிரபலமாகி வருகின்றன. இதுதான் சிந்து பற்றி திரைப்படம் எடுக்க சரியான நேரம். எனது திரைப்படக் குழுவினரை அழைத்து சிந்து குறித்த அனைத்து செய்திகளையும் சேகரிக்கச் சொல்லி திரைக்கதையை உருவாக்கினேன். ஒரு விருது விழாவில் சிந்துவை சந்தித்திருக்கிறேன். விரைவில் திரைக்கதை குறித்து சிந்துவிடம் கலந்து பேச வேண்டும். இந்தப் படம் அனைவரையும் குறிப்பாகப் பெண்களை விளையாட்டு அரங்கிற்கு ஈர்க்கும்'' என்கிறார் சோனு.

தனது வாழ்க்கை திரைப்படமாகிறது என்பது குறித்த சிந்துவின் பிரதிபலிப்பு இதுதான்: "சந்தோஷமான செய்திதான்... இளைய தலைமுறைக்கு விளையாட்டுத் துறையில் புதிய வெளிச்சத்தை இந்தத் திரைப்படம் பரப்பும். வெற்றி பெறுவதில் விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் தடைகள்... சிரமங்கள்.. உழைப்பு குறித்தும் திரைப்படம் அழுத்தமாகச் சொல்லும்'' என்றார்.

தீபிகா படுகோன், சிந்துவாக நடிக்கலாம் என்ற பேச்சு அடிபட ஆரம்பித்துவிட்டது..
- அங்கவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT