மகளிர்மணி

குறைகள் தந்த அதிர்ஷ்டம்!

தினமணி

முகத்தில்  மச்சம்  இருப்பது அழகுதான். கவர்ச்சிதான். ஆனால் மச்சங்களின் எண்ணிக்கை முகத்திலும் உடலிலும் அதிகமானால்  அது பெரும் பிரச்னையாக மாறும். 

ஸ்பெயின் நாட்டில் அல்பா பரேஜோ பிறந்த போது  சுமார் நூறு  மச்சங்கள்,  ஐநூறு தழும்புகளுடன்  பிறந்தார்.  அந்தப் பெண்ணின் எதிர் காலம் எப்படி அமைய போகிறதோ என்று   பெற்றோர் பயந்து கொண்டு இருந்தார்கள்.   வளர்ந்த அல்பாவை   கூடிய சீக்கிரமே  அதே பயம் தொற்றிக் கொண்டது.   

உண்மையில்,  பிறக்கும் போதே  அல்பாவுக்கு Congenital Melanocytic Nevus   என்ற குறைபாடு இருந்தது. இந்தக் குறைபாட்டால்     தோன்றியதுதான்  அந்த நூறு மச்சங்களும், ஐநூறு தழும்புகளும்.  

இந்த மச்சங்களை தழும்புகளை போக்க   சுமார் முப்பது  அறுவை சிகிச்சைகள் அல்பா செய்து கொண்டாலும் பயனில்லை.  பள்ளியில், அக்கம் பக்கத்தில் அல்பாவை  விநோதமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள்.  பலரின்  கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும்  அல்பா இலக்கானார்.  இதனால் அல்பா  பெரும்பாலான தருணங்களில்  அழுகையில் உடைந்திருக்கிறார். 

திடீரென்று அல்பா விஷப் பரீட்சை ஒன்றில் இறங்கினார். "என் படத்தை இன்ஸ்ட்டாகிராமில்  வெளியிட்டுத்தான் பார்ப்போமே வலைதள  ஆர்வலர்கள் என்ன கருத்து  சொல்கிறார்கள்  என்று  தெரிய வரும்' என்று தனது படத்தை  அந்த சமூக  வலைதளத்தில்  பதிவேற்றம் செய்தார். அதிசயமாக பலரும் அல்பாவைப் பாராட்டி ஆதரவு தெரிவித்தனர்.  அல்பா பரபரப்பு செய்தியானார்.  அல்பாவின் திடீர் பிரபலத்தைக் கண்ட ஸ்பெயின்  வர்த்தக நிறுவனமொன்று அல்பாவை மாடலாக ஒப்பந்தம் செய்தது. அல்பாவின்  படங்கள்  செய்தித்தாள்கள், டிவி   விளம்பரங்களில் இடம் பெற்றன.   விளம்பர பலகைகள்,  பேருந்துகளில் அல்பாவின்  புகைப்படங்கள் ஒட்டப்பட்டன.  அல்பாவுக்கு   விஐபி  அந்தஸ்து கிடைத்துவிட்டது. இப்போது விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் அல்பா!
- அங்கவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அரவக்குறிச்சியில் சாலை மறியல்

கிராம நிா்வாக அலுவலா் மாயம்

SCROLL FOR NEXT