மகளிர்மணி

உயரமானவர்களுக்கு சிக்கல்!

DIN

உயரத்துக்கும் ரத்த, நாள அடைப்புகளுக்கும் சம்பந்தம் உண்டு என ஓர் ஆய்வு கூறியுள்ளது.

உதாரணமாக ஒரு ஸ்வீடிஷ் நாட்டு தினசரி,  "கார்டியோ வாஸ்குலர் ஜெனடிக்ஸ்'  என்ற இதழை ஆதாரமாக காட்டி,  இந்த  தகவலை வெளியிட்டுள்ளது.  இதன்படி அதிக உயரம் கொண்டவர்கள்  ரத்த நாளங்களில் அதிக அடைப்பு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பது செய்தி. 27, லட்சம் ஸ்வீடிஷ்காரர்களிடம் இதுகுறித்து ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

குறைந்த உயரம் கொண்டவர்களுக்கு ரத்த அடைப்பு குறைவாகவும். அதிக உயரம் கொண்டவர்களுக்கு ரத்த அடைப்பு அதிகம் ஏற்படுவதாகவும் முடிவு தெரிய வருகிறது.

* 6.2 அடி அல்லது அதற்கும் அதிக உயரம் கொண்ட  ஆண்களைவிட, 5 அடி 3 அங்குலம்  உயரம் கொண்ட  ஆண்களுக்கு, ரத்த அடைப்பு 65சதவிகிதம் குறைவாக ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளனர்.

* பெண்களில் 6 அடி மற்றும் அதற்கு மேல் உயரம் கொண்டவர்களைவிட, 5 அடி 1 அங்குலம் கொண்ட பெண்களுக்கு 69 சதவிகிதம் குறைந்த ரத்த  குழாய் அடைப்பு ஏற்படுவதாகவும் இந்த ஆய்வு கண்டு பிடித்துள்ளது.

இந்த மாறுதலுக்கு முக்கிய காரணம் ஈர்ப்பு விசை  எனக் கூறப்படுகிறது. உயரம் கூடக்கூட, ரத்த நாளங்களின் நீளமும் அதிகரிக்கிறது. ஆக அடைப்பு ஏற்பட வாய்ப்பும் கூடுகிறது. அதேசமயம் காலில், புவியீர்ப்புவிசையில்  ஏற்படும் கூடுதல் அழுத்தம், அங்குள்ள ரத்த நாளங்களில் ஏற்படுவதால் அடைப்பு ஏற்பட கூடுதல் வாய்ப்பு   உருவாகிறது எனவும் கூறுகின்றனர்.
- ராஜேஸ்வரி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT