மகளிர்மணி

உலகின் மிக அழகான சிறுமி!

DIN

நைஜீரியாவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமிதான் இப்போதைய அழகான சிறுமி. அந்த சிறுமியின் பெயர் ஜேர். பார்க்க பார்பி பொம்மை மாதிரி இருக்கும் இந்த சிறுமியின் கண்களும் சுருள் சுருளாக இருக்கும் தலைமுடியும் அழகைக் கூட்டுகிறதாம். இது சிறுமியின் படங்களை பார்த்தவர்களின் கணிப்பு.
 இந்த சிறுமியின் படங்களை படம் எடுத்த மோஃப். கூறுகையில்: "ஆம்... இந்தப் பெண் மனுஷிதான்... தேவதையும் ஆவாள்'. காமிராவை கிளிக் செய்யும் போது சிறுமியை சிரிக்கச் சொல்லியிருக்கலாம். ஆனால் அது செயற்கையாக அமைந்திருக்கும். சிறுமியின் கண்கள் பேசட்டும் என்று சிறுமியின் போக்கில் விட்டு படம் பிடித்தேன்'' என்கிறார். இன்ஸ்ட்டாகிராமில் வெளியான இந்தப் படங்கள் வைரலாகி உலகின் மிக அழகான சிறுமி என்ற பாராட்டையும் பெற்றிருக்கிறாள். வலை தளங்களை வளைத்துப் போட்டிருக்கும் அழகான சிறுமி என்றும் போற்றப்படுகிறாள். "உலகின் மிக அழகான சிறுமி' என்று தன்னைக் கொண்டாடுவதை ஜேர் அறிந்திருப்பாளா என்பதும் சந்தேகமே.!
 - சுதந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT