மகளிர்மணி

சிறுதானிய டிபன் ஸ்பெஷல் - கொள்ளு கிச்சடி

DIN

தேவையானவை:

கொள்ளு - 200 கிராம்
வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 2
தக்காளி - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சைச் சாறு - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொள்ளை வறுத்து 8 மணி நேரம் ஊற வைத்து, உப்புச் சேர்த்து ரவை பதத்தில் அரைக்கவும். அரைத்த மாவை இட்லிப் பானையில் வேக வைத்து உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை தாளித்துப் பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் உதிர்த்த கொள்ளைச் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும். இறுதியில் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். சட்னியுடன் சாப்பிடலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT