மகளிர்மணி

சிறுதானிய டிபன் ஸ்பெஷல் - சாமை காஞ்சிபுரம் இட்லி

DIN

தேவையானவை:

சாமை அரிசி - 1/2 கிண்ணம்
இட்லி அரிசி - 1 1/2 கிண்ணம்
உளுந்து - 1 கிண்ணம்
இஞ்சி துருவல் - 1 மேசைக்கரண்டி
மிளகு, சீரகம் - 1/2 மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய், நெய் - தலா 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, சாமை, உளுந்து ஆகியவற்றை 6 மணி நேரம் ஊற வைத்து, ரவை பதமாக அரைத்து, 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி துருவல், பொடித்த மிளகு, சீரகம் ஆகியவற்றை மாவில் கொட்டிக் கலக்கவும். அதனுடன் நெய், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த மாவை சிறு கிண்ணங்கள் அல்லது டம்ளரில் பாதியளவு ஊற்றி, இட்லிப் பானையில் வேக வைக்கவும். சட்னி சாம்பார் அல்லது இட்லிப் பொடியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிராம பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

SCROLL FOR NEXT