மகளிர்மணி

சிறிய வயது இசையமைப்பாளர்!

தினமணி

தன்னுடைய சாதனைகளால் இந்தப் பன்னிரண்டு வயது சிறுமி பலரின் புருவங்களை உயரச் செய்திருக்கிறார். உலகிலேயே குறைந்த வயதுள்ள இசை அமைப்பாளர் என்ற பெருமையைக் கொண்டிருக்கும் பிராஞ்சலி சின்ஹா ஓர் ஆச்சரியக் குறியாய் மாறியிருப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. 

இசைக்கு மயங்காதவர் யார்? இறைவன் கூட இசையின் தாக்கத்திலிருந்து தப்ப முடியாது. பொழுதைக் கழிக்க மட்டுமல்லாமல் மனதைப் பக்குவப்படுத்தும் சக்தியும் புத்துணர்வு ஊட்டும் ஆற்றலும் இசைக்கு உண்டு என்பது நிரூபணமான விஷயம். அந்த இசையை வசப்படுத்தியிருப்பவர் பிராஞ்சலி. சொந்தமாக இசை ஆல்பம் தயாரித்து வெளியிட்டிருக்கும் பிராஞ்சலி தனது இசைப் பயணம் குறித்து விளக்குகிறார். 

"நான் பெங்களூருவாசி. ஆறாம் வகுப்பு படிக்கிறேன். நான்கு வயதிலிருந்து பாடக் கற்று வருகிறேன். என் பாட்டிதான் என்னை இசை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். பெங்களூருவைச் சேர்ந்த "அலைவ் இந்தியா' அமைப்பு நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பல சுற்றுக்களைக் கடந்து வந்தேன். இந்தப் போட்டியில் வயது வித்தியாசமில்லை. சிறியவர் முதல் பெரியவர் வரை கலந்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்கள் ஆன்லைன்னில் வாக்களிக்க வேண்டும். பெங்களூருவில் நடக்கும் பல பாடல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியுள்ளேன். மும்பையில் நடந்த போட்டிகளிலும் பரிசுகள் கிடைத்துள்ளன. 

இந்தத் தேர்வு முறை எல்லா இசைப் போட்டியிலும் நடப்பதுதானே... எனது போட்டியில் மட்டும் என்ன புதுமை இருக்கிறது என்று கேட்கலாம். பிரபலப் பாடகி சுனிதி செளஹான் இசை நிகழ்ச்சியில் நான் தான் முதலில் பாடினேன். பத்தாயிரத்துக்கும் மேல் இசைப் பிரியர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் செய்த கரகோஷம் என்னை அருமையாகப் பாட வைத்தது. இரண்டு பாடல்கள் பாடினேன். இதை மிகப் பெருமையைகக் கருதுகிறேன். 

ஒன்பதாம் வயதிலிருந்தே நான் பாடல்களை இசை அமைக்கத் தொடங்கினேன். எனக்குள் தோன்றும் மெட்டுக்களை எழுதி வைப்பேன். அவற்றின் சேகரிப்புதான் "என் கனவுகள்' (மேரே சப்னே ) என்னும் ஆல்பம். எனது குருநாதர் ஜீத்து ஷங்கர் எனது மெட்டுக்களுக்கு பாடல் வரிகளை எழுதித் தந்தார். படப்பிடிப்பு இசைப் பதிவிலும் குருநாதர் பெரிதும் உதவினார். மெட்டுக்கள் அந்தக் காலத்தையும் இந்தக் காலத்தையும் நினைவுபடுத்தும். 

இந்த ஆல்பம் 2017-ஆம் ஆண்டு வெளிவந்தவுடன், Golden Book of World Records அமைப்பை அணுகினோம். இந்த அமைப்புக்கு பல நாடுகளில் கிளைகள் உள்ளது. அந்த அமைப்பு சர்வதேச அளவில் எல்லா வகைத் தகவல்களையும் சரிபார்த்து, உலகிலேயே குறைந்த வயதில் இசை அமைப்பாளர் என்ற பட்டத்தை எனக்கு வழங்கியுள்ளது'' என்கிறார் பிராஞ்சலி. 

- பனுஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT