முகப்பு
மகளிர்மணி

ஆரோக்கிய உணவுகள்: மல்ட்டி வெஜ் சாதம்

கடுகு, சீரகம், கறிவேப்பிலை - சிறிதளவு

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

தேவையானவை:

பொன்னி அரிசி - 1/2 கிலோ
துவரம் பருப்பு - 100 கிராம்
கத்திரிக்காய் - 3
முருங்கைக்காய் - 1
தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு - தலா 2
பீன்ஸ் - 5
பரங்கிக்காய் - சிறிய துண்டு
மாங்காய் - 4 துண்டுகள்
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
தனியா - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் - தலா 3 சிட்டிகை
கொத்துமல்லித் தழை - சிறிதளவு
புளிக்கரைசல் - 1/2 கிண்ணம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, சீரகம், கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

ரிசியுடன் போதிய அளவு நீர் சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்து வைக்கவும். துவரம் பருப்பை குழைய வேக வைக்கவும். காய்கறிகளை ஒரே அளவாக நறுக்கி வேக வைத்து எடுக்கவும். உளுத்தம் பருப்பு, தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், தனியா இவைகளை வறுத்து பொடித்து வைக்கவும். 

டிகனமுள்ள பாத்திரத்தில் வேக வைத்த துவரம் பருப்பு, காய்கறிகள், பொடித்து வைத்துள்ள மசாலா, புளிக் கரைசல், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்து வாசனை வந்ததும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். வேக வைத்த சாதத்துடன் இந்தக் காய்கறிக் குழம்பை ஊற்றி, கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிக் கிளறிப் பரிமாறவும். இந்த சாதத்துடன் 
அப்பளம் பொரித்துச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
 

முழு கட்டுரையைப் படிக்க →