மகளிர்மணி

தெரிந்து கொள்வோம்! வெந்தயத்தின் பயன்கள்! 

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

தினமணி

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் எழுந்து அந்த தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலக்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும். வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் புண்ணை ஆற்றும் தன்மைக் கொண்டது. வயிற்றுப்போக்கை குணமடையச் செய்வதோடு, தாய்ப்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. சர்க்கரை வியாதி குறைக்கும் மருத்துவ குணமும் இதில் உள்ளது. வெந்தய கீரையைப் பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்புசம் இருந்தாலும் குறையும். வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்புசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும். பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்னையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்து பாருங்கள், முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்கிறது. பொடுகுப் பிரச்னை, அரிப்பு, குறைவதோடு முடி பளபளப்பாகவும் வைக்கிறது. வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும்.
 - பொ.பாலாஜிகணேஷ்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு டிரம்ப் அழுத்தம்?

மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

SCROLL FOR NEXT