பாலிவுட் நடிகை அலியாபட்டின் தாயும், நடிகையுமான சோனி ராஸ்தான், சமீபத்தில் நடித்துள்ள "யுவர்ஸ் ட்ரூலி' என்ற படம் பூசன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. "அபர்ணா சென்னின் "36', "சவுரங்கிலேன்', "மண்டி', "சரான்ஸ்' போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும், முதன் முறையாக "யுவர்ஸ் ட்ரூலி' படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பதும், அந்தப்படம் திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று கூறும் சோனி ராஸ்தான், கடைசியாக மேக்னா குல்சாரின் "ராஸி' படத்தில் அலியா பட்டின் அம்மாவாகவே நடித்தது குறிப்பிடத்தக்கது.