மகளிர்மணி

கரிசலாங்கண்ணிக் கீரையின் பயன்கள்!

DIN

* கரிசலாங்கண்ணிக் கீரையில் சிறிது பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர தலைமுடி உதிர்வது நிற்கும். முடி கறுத்து வளரும். 

* இதன் இலைகளை மென்று பல் துலக்கினால் ஈறுவீக்கம், பல்வலி, பல் தேய்வு முதலிய குறைகள் நீங்கும். பற்கள் உறுதியாகும். பற்களில் உள்ள மஞ்சள் நிறம் நாளடைவில் மாறும்.

* கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறுடன் சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளித்தொல்லை நீங்கும். உடலில் பெருகும் வேண்டாத பித்த நீரை வெளியேற்ற உதவும்.

* விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில் கரிசலாங்கண்ணிக் கீரையை அரைத்து தடவினால் விஷம் இறங்கும்.

* கரிசாலை, கையாந்தகரை, பொற்றிலைப்பாவை, பிருங்கராஜ் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
- சு.பொன்மணி ஸ்ரீராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT