மகளிர்மணி

பீர்க்கங்காய் தரும் பலன்கள்!

DIN

  பீர்க்கங்காய் செடியின் வேர், இலை, காய், பூ அனைத்தும் மருத்துவ குணங்கள் பெற்ற ஒன்று.
  இரும்புச் சத்து, நார்ச் சத்து, பாஸ்பரஸ் மட்டுமில்லாமல் பல வைட்டமின் சத்துகளும், தாது உப்புகளும் இதில் அடங்கியுள்ளன.
  பீர்க்கங்காயை உண்டு வந்தால் நீரழிவு, தோல் நோய், ரத்த சோகை, கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அகலும்.
  பீர்க்கன் இலையில் சாறெடுத்து, அதை கொதிக்க வைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பருகி வந்தால், சர்க்கரை நோய், ரத்த சோகை நோய்கள் கட்டுப்படும்.
  பீர்க்கன் இலையை அரைத்து, புண்களில் தடவிக்கட்டுப் போட்டால், ஆறாத புண்கள் கூட ஆறிவிடும்.
  சொரி, சிறங்கு, போன்ற அரிப்பு நோய்களுக்கும் பீர்க்கன் இலைச் சாறு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
  வாரத்தில் ஒருநாள் சமையலில் சேர்த்துக் கொண்டால் போதும், நோய்கள் வராமல் தடுக்கலாம்.
  பீர்க்கங்காயில் சாம்பாரும், பருப்புக் கூட்டும் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
 - சு.இலக்குமணசுவாமி, மதுரை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT