ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது பச்சரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால், ஆப்பம் மெத்தென்று இருக்கும்.
தக்காளிப் பச்சடி, கீரை மசியல் செய்யும்போது தாளிக்க கடுகுக்குப் பதில் சீரகம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
பருப்பு உருண்டைகள் குழம்பில் கரையாமல் இருக்க, அதனுடன் அரிசி மாவையும் சேர்த்து உருட்டி செய்தால் கரையாது.
உளுந்து வடைக்கு மாவு அரைத்து, அதனுடன் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வடை செய்தால் வடை மிகவும் சுவையாக இருக்கும்.
பாகற்காய் கறி செய்யும்போது அதனுடன் சிறிது ஆம்சூர் பொடி அல்லது புளி கரைசலைச் சேர்த்தால் கசப்பு அதிகமாக தெரியாது.
நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க அதனை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வேகவிடவும்.
வாடிப்போன கொத்துமல்லித் தழையை வெதுப்பான நீரில் போட்டு எடுத்தால் ப்ரஷ் ஆகிவிடும்.
இட்லிப் பொடியுடன் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு ஒரு சுற்று அரைத்து எடுத்தால் வெங்காயச் சட்னி தயார்.
பொரித்த குழம்பு செய்வதற்கு தேங்காய் இல்லையெனில் எருமைப்பாலில் திட்டமாக அரிசி மாவைக் கரைத்துக் குழம்பில் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
வெந்தயக் குழம்பு, பாகற்காய் பிட்லை மணமாகவும், சுவையாகவும் இருக்க மூன்று உளுந்து அப்பளங்களைப் பொரித்து நொறுக்கிச் சேர்த்து இறக்கினால் சுவை பிரமாதமாக இருக்கும்.
குருமா குழம்பு செய்யும்போது தேங்காயுடன் ஒரு கரண்டி பொரி அரிசி, வெங்காயம், கொத்துமல்லி சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.