மகளிர்மணி

அழகு குறிப்புகள்

ஆரஞ்சுப் பழத்தோலைக் காய வைத்து, பொடி செய்து பின் பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமை மறையும்.

DIN

 ஆரஞ்சுப் பழத்தோலைக் காய வைத்து, பொடி செய்து பின் பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமை மறையும்.
  தேங்காய்ப் பாலுடன் ஒரு தேக்கரண்டித் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்வதால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
  வேப்பிலை, புதினா, குப்பைமேனி இலைகளை காயவைத்து, பொடி செய்து கொண்டு, பின்னர் பாலில் குழைத்து முகத்தில் பூசி, இருபது நிமிடங்கள் ஊறவிட்டு கழுவினால் நாளடைவில் கருமை நீங்கிவிடும்.
  ஆரஞ்சுப் பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து பயத்தமாவு போட்டு கழுவ வேண்டும், வாரம் மூன்று அல்லது நான்கு நாட்கள் செய்துவந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
  தேங்காய் எண்ணெய்யில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தம் மாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறும்.
  புதினாச்சாறு, எலுமிச்சைச் சாறு, பயத்தம் மாவு ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவிவிட்டு, ஐஸ் கட்டிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும்.
 (நலம் தரும் எழில் இயற்கை
 மருத்துவம் என்ற நூலிருந்து)
 - சு. பொன்மணி ஸ்ரீராமன்,
 சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

பெண் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரிக்கை

நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை: திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரல்

SCROLL FOR NEXT