மகளிர்மணி

கை வைத்தியம்!

மாதவிடாய்  சீரடைவதற்கு  நான்கு புதிய  செம்பருத்திப் பூக்களை  வெறும் வயிற்றில்  காலை நேரத்தில்  ஏழு நாட்கள்  சாப்பிட வேண்டும்.

DIN


மாதவிடாய்  சீரடைவதற்கு  நான்கு புதிய  செம்பருத்திப் பூக்களை  வெறும் வயிற்றில்  காலை நேரத்தில்  ஏழு நாட்கள்  சாப்பிட வேண்டும்.

கறிவேப்பிலையை  அரைத்து  தினமும்  நெல்லிக்காய்  அளவு  வெறும் வயிற்றில்  சாப்பிட்டு வர  இளநரை  சீக்கிரமே  மறைந்து  போகும்.

சிறிதாக நறுக்கிய முள்ளங்கி,  வாழைத்தண்டுடன்  சுக்கு,  சீரகம்,  ஓமம், பெருங்காயம்,  மஞ்சள் தூள் தேவையான  அளவு  சேர்த்து  கொதிக்க வைத்து  சூப்பாக சாப்பிட  தலைவலி  நீங்கும்.

காலை  உணவுக்கு அரைமணி  நேரத்திற்கு முன் தோல் நீக்கிய  இஞ்சித் துண்டை  சாப்பிடுங்கள். கொழுப்பைக் குறைக்கும்.  தொப்பையைக் கரைக்கும்.

பச்சை  வெங்காயத்துடன்  உப்பைக் கலந்து  சாப்பிட்டால்   வயிற்றுவலி  உடனே  குணமாகும்.

மாதவிடாய்  வயிற்றுவலி  தீர அத்திப்பழத்தை  தேனில்  ஊற வைத்து  சாப்பிட வேண்டும்.

ஆவாரை  இலையை  நிழலில் உலர்த்தி இடித்துத் துளாக்கி  வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு  வந்தால்  உடல் எடை  எளிதாகக் குறையும். இதன் பூவை கொதிக்க வைத்து அதன் சாறை அருந்த சர்க்கரை மட்டுப்படும்.

கடுகு,  நல்லெண்ணெய், ஆலிவ்  எண்ணெய்  சரிவிகிதத்தில்  கலந்து  உடலில்  பூசி  ஒரு மணி  நேரம்  ஊறியபின்  குளித்தால்  தோலில்  உள்ள சுருக்கங்கள்  நீங்கி  மேனி  அழகாக  இருக்கும்.

* காளான்களை  அலுமினியப் பாத்திரத்தில்  சமைக்கக் கூடாது. ஏனென்றால்  அவை பாத்திரத்தை  கருமையாக  மாற்றிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT