மகளிர்மணி

கரோனாவை விரட்டும் நால்வர்!

தேன், பூண்டு,  வெங்காயம், கல்உப்பு இவை நான்கும்  கரோனாவை விரட்டும் வல்லமை கொண்டவை. எப்படி  பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்:

ஆர். ஜெயலட்சுமி

தேன், பூண்டு,வெங்காயம், கல்உப்பு இவை நான்கும்கரோனாவை விரட்டும் வல்லமை கொண்டவை. எப்படிபயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்:

தேன்

நறுக்கிய இஞ்சி துண்டுகள் ஒரு தேக்கரண்டி எடுத்துஅதில் ஒரு தேக்கரண்டி தேனைவிட்டு மென்று தின்றால்தொண்டைக்கட்டுசரியாகும்.

தேன் ரத்தத்தில்உள்ள ஹீமோகுளோபின்அளவைஅதிகரிக்கும்.

கால் தேக்கரண்டிமிளகுப் பொடியில் சிறிது தேன்விட்டு குழைத்துநாக்கில்தடவிக் கொண்டால்இருமல் நிற்கும்.

பாலில்தேன் கலந்து குடித்து வந்தால்உடலில்நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்.பழ சாலட்,பால், இட்லிபோன்றவற்றுடன் தேன் கலந்து உண்டு வந்தால் கரோனாகிட்ட நெருங்காது.

பூண்டு

இரைப்பை, நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு பூண்டு நல்ல மருந்து.

சளி பிடித்துக் கஷ்டப்படுபவர்களுக்கு பூண்டை உரித்து, நசுக்கி, தக்காளி, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்த சூப்பாகக் குடிக்கச் சொல்லலாம்.

கரோனா, நிமோனியா ஜுரம் வந்தவர்கள் பூண்டை சாப்பிட்டால் விரைவில் குணமடைவார்கள். பாலில் பூண்டைப் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம் போகும்.

வெங்காயம்

வெங்காயம் உடல் தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகளைப் போக்குகிறது.

நோயாளி இருக்கும் அறையில் ஒரு சில வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வைத்தால் அது அறையில் உள்ள கிருமிகளை தன்னுள் இழுத்துக் கொள்ளும். நோயாளி விரைவில் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கை உலகின் பல நாடுகளிலும் இருக்கிறது. காரணம் வெங்காயத்துக்கு நோய் கிருமிகளை அழிக்கும் சக்தியுள்ளது.

வேகவைத்த வெங்காயத்தின் சாற்றை சாப்பிட்டால் ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டு முதலியன போய்விடும்.

ஜலதோஷத்திற்கு வெங்காயத்தை நறுக்கி முகர்ந்தால் சரியாகிவிடும்.

கல்உப்பு:

ஒருவாளித் தண்ணீரில் கால் கிலோ அளவுக்கு கல் உப்பைப் போட்டுக் கரைத்து அந்தத் தண்ணீரில் கை, கால் கழுவினால் கிருமி அழிந்துவிடும்.

கல் உப்பு போட்ட தண்ணீரால் வீட்டை துடைத்தாலும், வாசல் தெளிக்கும் போது அந்த நீரை கொண்டு தெளித்தாலும் கரோனா கிருமி கிட்ட அண்டாது.

கொதித்து ஆறிய வெந்நீரில் கல் உப்பையும், மஞ்சள் தூள் சேர்த்து வாய் கொப்பளித்தால் தொண்டையில் எந்த கிருமியும் பாதிக்காது.

கல்உப்பு, மஞ்சள் தூள், வேப்பிலை போட்ட வெந்நீரை கொண்டு ஆவி பிடித்தால் மூக்கு நாசியில் ஏற்படும் தொற்று, தலையில் ஏற்படும் சைனஸ் பிரச்னை ஆகியவற்றை நீக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT