மகளிர்மணி

கமலா (ஆரஞ்சு பழம்)

நார்த்தை வகையைச் சேர்ந்த கமலா பழத்தையே ஆரஞ்சு பழம் என்கிறோம். வளரும் குழந்தைகளுக்கு தினமும் இப்பழச்சாற்றை கொடுத்து வந்தால் குழந்தைகள் சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள்.

இரா.செயபாலன்

நார்த்தை வகையைச் சேர்ந்த கமலா பழத்தையே ஆரஞ்சு பழம் என்கிறோம். வளரும் குழந்தைகளுக்கு தினமும் இப்பழச்சாற்றை கொடுத்து வந்தால் குழந்தைகள் சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள்.

இப்பழத்தின் தோலை உலர்த்தி ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பற்பொடியாக பயன்படுத்தினால் ஈறுகள் உறுதிபடுவதுடன் பற்கள் வெண்மையாகும். பல்நோய் வராது.

இப்பழச்சாறு தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சொத்தைப் பல்லை குணமாக்கி எனாமலைப் பாதுகாக்கிறது. மேலும் பல்வலி, ஈறுவீக்கம், ரத்தக் கசிவை
குணமாக்கும்.

இப்பழத்தின் வெண்ணிறத் தோல் நார்சத்து நிரம்பியது. அதை பழத்துடன் சேர்த்து சாப்பிட்டால் குடலைத் தூய்மையாக்கி மலச்சிக்கலைப் போக்கும்.

இப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். இதில் உள்ள லிமனாய்ட் (limonoids) என்ற வேதிப்பொருள் தோல், நுரையீரல், மார்பகம், குடல் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது. இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் சிறுநீரகக் கல் உருவாவதற்கான வாய்ப்பும் குறையும். இதயத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவும் பொட்டாசியம் தாது உப்பு இதில் அதிகமாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT