மகளிர்மணி

எந்த வேலையாக இருந்தாலும் சிறப்பாக செய்வோம்!

கோவை மாநகராட்சியில் 549 துப்புரவு பணியிடங்கள் காலியாக இருந்தன. அந்த பணியிடங்களுக்கு 5200 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேர்காணல் மூலம் 321 தேர்வு செய்யப்பட்டனர்.  இதில் தெலுங்குபாளையத்தை சேர்ந்த எம்.எ

வனராஜன்

கோவை மாநகராட்சியில் 549 துப்புரவு பணியிடங்கள் காலியாக இருந்தன. அந்த பணியிடங்களுக்கு 5200 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேர்காணல் மூலம் 321 தேர்வு செய்யப்பட்டனர்.  இதில் தெலுங்குபாளையத்தை சேர்ந்த எம்.எஸ்சி. படிக்கும் மாணவியான மோனிகா, பணி நியமன ஆணை பெற்று  தற்போது பணியாற்றி வருகிறார்.

""மாநகராட்சியில் வேலைக்கு ஆள் எடுப்பதை அறிந்து அதற்கான நேர்காணலில் பங்கேற்றேன். படித்திருக்கிறோம் என்பதால் துப்புரவு பணி செய்யமாட்டோம் என்பது இல்லை. எந்த வேலையாக இருந்தாலும் சிறப்பாக செய்வோம். வேலை கிடைத்தது என்று போனில் தகவல் வந்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
அரசு வேலையில் சேர வேண்டும் என்பது எனது சிறுவயது கனவு. தற்போது அது நிறைவேறி உள்ளது. அரசு வேலை என்பதால் நான் இந்தப் பணியில் சேர்ந்தேன். எனக்கு முதன் முதலாக ராஜவீதியில் ரோட்டை சுத்தம் செய்யும் பணி வழங்கப்பட்டது. இந்த பணி ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. சாலையில் செல்பவர்கள் அனைவரும் என்னையே பார்த்து சென்றனர். ஆனால் நான் அதனை சமாளித்து விட்டேன். இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. இந்தப் பணியில் இருந்து இன்னும் மேலே உள்ள பணிகளுக்கு வர முயற்சி எடுப்பேன்'' என்கிறார் மோனிகா. 

பத்மாவதி என்ற பெண்ணும் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வந்த பத்மாவதி, அங்குக் கிடைக்கும் ஊதியத்தை விடத் துப்புரவு பணியில் அதிக ஊதியம் கிடைப்பதால், கணக்காளர் பணியை விட்டுவிட்டு இப்பணியில் சேர்ந்துள்ளார்.

தற்போது யாருக்கும் படித்த படிப்பிற்கு வேலை கிடைப்பதில்லை என தெரிவிக்கும் பட்டதாரி பெண்கள், தற்போது ஜெராக்ஸ் கடையில் 8 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை பார்த்து வரும் நிலையில் துப்புரவு பணியாளர் வேலை கிடைத்தால் இன்னும் அதிகம் ஊதியம் கிடைக்கும் என்பதால்  இந்த பணிக்கு விண்ணப்பித்து  இருந்ததாக தெரிவிக்கின்றனர். 

இப்பணிக்கான தகுதி , 21 முதல் 57 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழ் மொழியை எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 10}ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.15,700 முதல் ரூ. 50 ஆயிரம் வரை வழங்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமேசுவரத்தில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுக, அமமுகவினா் மரியாதை

கூட்டணி விவகாரத்தில் கட்சித் தலைமை முடிவுக்கு கட்டுப்படுவோம்: சுதா எம்.பி.

அரசுப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

SCROLL FOR NEXT