மகளிர்மணி

 மீல் மேக்கர் வடை 

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில

காந்தி

தேவையானவை

மீல் மேக்கர் - 1கிண்ணம்
கடலை மாவு - 1 கிண்ணம்
சோள மாவு - 1  மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மட்டன் மசாலா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
சீரகப் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதற்குள் ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரைத் தவிர, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து,  அதனுடன் தண்ணீர் சேர்த்து  பிசைந்து கொள்ள வேண்டும்.  அரைத்த மீல் மேக்கரை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். இறுதியில் இந்த கலவையை வடைகளாக தட்டி, அடுப்பில் உள்ள எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மீல் மேக்கர் வடை ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் கடைசி சாலை முடியும் இடம்! அதைத் தாண்டி நிலப்பரப்பே இல்லையாம்!!

சுதாகர் ரெட்டி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நள்ளிரவில் உத்தரகண்டை புரட்டிப்போட்ட வெள்ளம்! 2 பேர் மாயம்!

கேரளத்துக்கு வரும் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா! அதிகாரபூர்வ அறிவிப்பு!

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT