மகளிர்மணி

நறுமணப் பொருட்களின் ராஜா மிளகு!

நறுமணப் பொருட்கள் வாணிபத்தில் மிகவும் தொன்மையான பொருள்களுள் ஒன்று மிளகு. இது பூத்து, காய்த்து, படர்ந்து வளரும் கொடி வகையை சார்ந்தது.

சு.பொன்மணிஸ்ரீராமன்

நறுமணப் பொருட்கள் வாணிபத்தில் மிகவும் தொன்மையான பொருள்களுள் ஒன்று மிளகு. இது பூத்து, காய்த்து, படர்ந்து வளரும் கொடி வகையை சார்ந்தது.

மிளகு பழத்திற்காகவே வளர்க்கப்படுகிறது. இப்பழத்தில் ஒரே ஒரு விதை தான் இருக்கும்.

பழம் சிவப்பாகவும், உலர்ந்தப்பின் கருப்பாகவும் காணப்படும். இதனை கருப்புமிளகு என்றழைப்பர்..

காரத்திற்கும், மணத்திற்கும் சுவைக்கும்  பயன்படுத்தப்படுகிறது.

மிளகு உடல்ஆரோக்கியத்திற்கும், சீரணத்திற்கும் பெரிதும் உதவுகிறது.

மிளகின் காரநெடியின் காரணி அதன் நடுவிலுள்ள காப்சாய்கின் என்னும் வேதிப்பொருளேயாகும்.

இது இதயநோய்களை கட்டுபடுத்துகிறது.  ரத்தகுழாய்களை தூண்டிவிடுகிறது. கொழுப்பையும் மிகை ரத்த அழுத்தத்தையும் குறைக்க வழிவகுக்கிறது.

அதோடுமட்டுமின்றி ரத்தகுழாய்கள் கடினமாவதையும் குறைக்கிறது.

உடலின் செல்களை பாதுகாத்து, வயதாவதைக் தடுக்கிறது.

வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுப் பொருமலை குறைக்க உதவுகிறது.

நறுமணப்பொருள்களின் வாணிபத்தில் மிளகின் ஆதிக்கம் 25சதவீதம் இருப்பதால், நறுமணப்பொருள்களின் ராஜா என்று மிளகு போற்றப்படுகிறது.

கருப்பு மிளகு வாணிப சந்தையில், மதிப்புமிக்க பொருளாக கறுப்புத்தங்கமாகவே கருதப்படுகிறது.

ஐந்து மிளகு  கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம் என்பது பழமொழி. ஏனெனில் மிகச்சிறந்த நஞ்சுமுறிப்பான் மிளகு. 

"நறுமணங்கள்' என்னும் புத்தகத்திலிருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT